பாடல் திருத்தலம் பெற்ற திருவலாங்காடு வடராணேஸ்வரர் திருக்கோயில் குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து கிடப்பதால் தண்ணீர் மாசு அடைந்துள்ளது. அதனால் அந்த பகுதியில் நோய் தொற்று பரவும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கோயில் நில்வாகத்தினர் விரைவில் சரி செய்து தரவேண்டும் என்கின்றனர் அந்த பகுதி பொது மக்கள்.
திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காட்டில் உள்ளது வட ராணேஸ்வரர் திருக்கோயில். இந்தக் கோயிலுக்கு ஒரு திருக்குளம் இருக்கிறது சுமார் 7.50 ஏக்கர் பரப்பளவில் கொண்டது. சுமார் 25 அடி ஆழம் கொண்ட இந்த குளம் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
இந்தக் குளத்தின் நிலை தற்போது மிக மோசமாக மாறி உள்ளது. நூற்றுக்கணக்கான டன் எடை கொண்ட மீன்கள் இந்த குள்ளத்தில் இருக்கிறது. இதில் திடீரென ஆயிர கணக்கில் மீங்கள் செத்து மிதிக்கிறது அழுகிய நிலையில் குளத்தில் மீன்கள் இருப்பதால் குளத்தில் உள்ள தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் திருவாலங்காடு கோயில் அருகில் உள்ள 6000 மக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அது தவிர கோயிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள் முதியவர்கள் அந்த பகுதியிலே திறந்த வெளியில் மலம் கழித்து விட்டு அந்த கோயில் குளத்து தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர் இதனால் தண்ணீரின் தரம் மிக மோசமாக மாறி உள்ளது.
இந்த குளத்திற்கு ஒரு காவலர் பணியில் அமர்த்தபட்டார். ஆனால் அந்த காவலர் பணியில் இருப்பதே இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. அது மட்டும் இல்லாமல் கோயில் திருக்குளத்தை சுற்றி தூய்மையாக இல்லாமல் நோய் தொற்று பரவும் நிலையில் அசுத்தமாக இருந்து வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் பலர் வடரானேஸ்வரர் கோயிலின் நிர்வாகிகள் இடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அது தவிர திருத்தணி கோயில் இணையானையர் ரமணியிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள்.அதுதவிற
ஏற்கனவே மாந்தீஸ்வரர் பரிகார பூஜையில் பல லட்ச ரூபாய் பக்தர்களிடம் இருந்து மோசடியாக பெறப்பட்டு வருகிறது என்கிற குற்றச்சாட்டுக்கு இதுவரை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
சாமி சன்னதியில் பக்தர்களை உட்கார வைக்கப்படுவதற்கு ஐயர்கள் தனியாக பணம் லஞ்சமாக கேட்டு சம்பாதித்து வருகின்றனர். கோயில் ஊழியர்களும் பரிகார பூஜையில் கலந்து கொள்பவர்களிடம் தனியாக பணம் வசூலித்து வருகின்றனர்.
இது குறித்து இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இணையதளத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் திருக்கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் வெளியூர் பக்தர்கள் முகம் சுழித்து செல்கின்றனர் அது மட்டும் இல்லாமல் கோயிலில் உள்ள கழிவறையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கோயில் நிர்வாகம் அனுமதிப்பதில்லை. அந்த கழிவரையை கோயில் நிர்வாகிகள் மட்டுமே பயன்படுத்தி கொள்கின்றனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


எனவே குளத்தை பாதுகாக்க 24 மணி நேரமும் ஒரு வாட்ச்மேன் நியமிக்கப்பட வேண்டும்.
மேலும் குளத்தை அசுத்தப்படுத்தும் வகையில் பக்தர்கள் யாரும் துணிமணிகளை குளத்தில் விட அனுமதிக்க கூடாது என்கின்றனர் அந்த பகுதி பொதுமக்கள் இது தவிர நாளை அந்த கிராமத்தை சேர்ந்த திரௌபதி அம்மன் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அந்த பகுதியில் கோயிலில் குளத்தில் மீன்கள் செத்து கிடப்பதால் பக்தர்கள் முகம் சுழித்து வருகின்றனர்.
பக்தர்கள் கோயில்களில் ஐயர்களுக்கு தட்டில் பணம் போடுவதை நிறுத்த வேண்டும் அது தவிர்த்து உண்டியலில் பணம் போடுவதையும் நிறுத்தினால் திருக்கோயில்களில் ஊழல் நடைபெறுவது தடுக்கப்படும்.
அதேபோல பக்தர்கள் நேர்த்திக்கடனுக்கு பொருட்கள் வாங்கித் தர வேண்டும் ஆனால் பணமாக தரக்கூடாது என்கின்றனர் அந்தப் பகுதியை சேர்ந்த திராவிடர் கழக தொண்டர்கள்.
