பிப்ரவரி 4 ம் தேதி உலக புற்று நோய் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நேற்று திருவள்ளூர் அருகே பாண்டூரில் உள்ள பிரியதர்ஷினி பல் மருத்துவ கல்லூரி மாணவர்கள் பேரணி நடத்தினர்.
இந்த பேரணி திருவள்ளூர் காமராஜர் சிலையில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை சென்றது.மாணவர்கள் நடத்திய இந்த பேரணியில்புற்றுநோய் குறித்தான விழிப்புணர்வு தொடர்பான பதாகைகளை ஏந்தி மாணவர்கள் சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாக இயக்குனர் இந்திரா மற்றும் இந்த விழாவிற்குசிறப்பு விருந்தினராக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்ஃபி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் வருண் குமார் ஐ.பி.எஸ். ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரியதர்ஷினி பல் மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாக இயக்குனர் இந்திரா ராஜேந்திரன், நிர்வாகிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.