chennireporters.com

கொரோணா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி .கேரள அரசு உத்தரவு.

சபரிமலையில் தினசரி 25,000 பக்தர்களுக்கு கோயிலுக்கு செல்ல அனுமதி அளித்தது கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டு உள்ளார்.

மண்டல பூஜை, மகர விளக்கு, ஜோதி விழா அடுத்த மாதம் 16-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அரசு அறிவித்துள்ளது.

தேவைக்கேற்ப கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து ள்ளார்.

ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் அப்போது தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரளா அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க.!