பொதுமக்கள் பாதுகாப்புடன் தீபாவளி கொண்டாட
வேண்டும் என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. முனைவர் சைலேந்திரபாபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பொதுமக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் குடிசை பகுதிகள், சரணாலயங்கள் மற்றும் அதி பறவைகள் உள்ள பகுதிகளில் பட்டாசு வெடிக்க தவிர்ப்பது நல்லது என்று கூறியுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் குழந்தைகள் பத்திரமாக பட்டாசு வெடிக்க வேண்டும்.
மேலும் பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகளுடன் பெற்றோர் உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டும்.
வெளியூருக்குச் செல்லும் பொதுமக்கள் நகை பணம் எடுத்துச் சென்றால் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அதை பத்திரமாக கொண்டு செல்ல வேண்டும் பொதுமக்கள் எந்த நேரத்திலும் போலீசாரை அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.