chennireporters.com

கே.டி.ராகவன் செக்ஸ் வீடியோவை வெளியிட சொன்னாரா அண்ணாமலை.!?

தமிழக அரசியலில் புயலை கிளப்பிய தமிழக ப.ஜ.கவின் பொதுச்செயலாளர் கே .டி. ராகவனின் வீடியோ வெளியிட்டவர் தலைமறைவாக இருப்பதாக ப.ஜ.க வட்டாரத்தில் பேசப்படுகிறது.  தமிழகத்தில் இரண்டு நாட்களாக அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பிய பா.ஜ.கவை சேர்ந்த வழக்கறிஞர் கே .டி. ராகவன் தொடர்பான வீடியோ பல லட்சம் பேர் பார்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பா.ஜ.க. வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பி கிளப்பியது மதன் ரவிச்சந்திரன் என்கிற பத்திரிகையாளர் கே. டி. ராகவன் ஒரு பெண் பேசும் வீடியோவை வெளியிட்டிருந்தார். வீடியோ வெளியிட்ட அடுத்த சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்தனர்.

உலகம் முழுவதும் இந்த வீடியோ வைரல் புயலாய் மாறியது.  நம்ம ஊர் நெட்டிசன்கள் அவர்கள் விருப்பம் போல் பலர் வீடியோவை தங்கள் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்கள். உண்மையில் கே. டி.ராகவன் விஷயத்தில்  என்ன நடந்தது?  அந்த வீடியோவில் இருப்பது கே .டி. ராகவனிடம் பேசிய பெண் யார்?  யார் சொல்லி பேசினார் எதற்காக இந்த ’ஸ்டிங்’ ஆபரேஷன் நடந்தது.

அதன் பின்னணியில் இருந்தது அண்ணாமலையா? அல்லது ராகவனுக்கு பிடிக்காதவர்கள் செய்த சதியா? என்று பல்வேறு கேள்விகள் இந்த வீடியோ மூலம் எழுகிறது.  ஆட்சியதிகாரத்தில் இருக்கிற ஒரு பவரான முக்கிய பொறுப்பில் அங்கம் வகிக்கிற ஒருவர் இதுபோன்ற வீடியோவில் தோன்றி இருப்பது அந்த கட்சியின் வளர்ச்சியை ஒரு மாநிலத்தில் தடுக்கும்.

ஜே.பி. நட்டா முன்னிலையில் பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே அந்த கட்சியில் இணைந்த ரிப்போர்ட்டர் மதன் ரவிசந்திரன் ஏன் தினமலர் அனுமதி இல்லாமல் அந்த வீடியோவை ஏன் வெளியிட்டார்.

அந்த வீடியோவை வெளியிடுவதற்கு தினமலர் காரணமா என்கிற கேள்வியையும் மூத்த பத்திரிகையாளர்களும் மூத்த அரசியல்வாதிகளும் எழுப்புகிறார்கள் . திடீரென்று தினமலர் நிர்வாகம் அவரை வேலையை விட்டு நீக்கி இருக்கிறார்கள் .

மதனுடைய அனைத்து செல்போன்களும் அனைத்துவைக்கப்பட்டிருக்கின்றன . பல சமூக வலைதளங்களில் மதனுக்கு பின்னால் இருந்து இயக்கியது யார் என்கிற கேள்வியே விவாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உண்மையில் மதன் அந்த வீடியோவை வெளியிடுவதற்கு காரணமாக இருந்தவர்கள் யார் என்கிற உண்மை  மதன் வெளியிட்டால்தான் உண்மைக்கான  காரணம் என்ன என்று தெரியவரும் .

வீடியோவை வெளியிடுவதற்கு காரணம் யார் வீடியோவை வெளியிட சொன்னவர்கள் யார் என்கிற உண்மை தெரிந்த பிறகுதான் கே .டி. ராகவன் விஷயத்தில் உண்மை வெளிவரும் செய்தியாளர் மதன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்கிற நிலை  இருப்பதாக மதனே தனது வீடியோவில் கூறியுள்ளார்.  இந்த செய்திதான் தமிழக பத்திரிகை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.  ராகவனின் செக்ஸ் வீடியோ யூடியூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!