chennireporters.com

#disobey collector; உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத கலெக்டர்.

அரசு புறம்போக்கு நிலங்களை பத்திர வரிசை பத்திரப்பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் மாவட்ட நிர்வாகம் மௌனமாக இருப்பதற்கு காரணம் என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்கின்றனர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள். பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலங்களை விற்பனை செய்தவர்கள் மீது சிபிஐ வழக்கும் தொடர்ந்து இருக்கிறது இருப்பினும் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு யார் தடையாக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்கின்றனர் அதிமுகவை சேர்ந்தவர்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், புழல் ஊராட்சி ஒன்றியம், விளாங்காடுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 100 ஏக்கர் அரசு புறம்போக்கு தன்மை கொண்ட நிலங்களான கோவில் நிலங்கள், களம், வாய்க்கால், மேய்க்கால்,  தரிசு, குட்டை, குளம், மயானம் போன்ற நிலங்களை முறைகேடாக ரெட்ஹில்ஸ் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து, அவற்றில் பல்வேறு நிலங்களுக்கு வருவாய்த்துறை மூலம் பட்டாவும் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பு 26/02/2024 அன்று வரப்பெற்றது.

 

Collector Tiruvallur (@TiruvallurCollr) / X

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர்

அதில் அரசு புறம்போக்கு நிலங்கள் எதன் அடிப்படையில் பத்திர பதிவு செய்யப்பட்டது என்பதை 8 வாரத்திற்குள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.


இந்நிலையில்  கடந்த 17/05/2024 அன்று சமூக ஆர்வலர் செல்வம் மீரான் என்பவர் அளித்த புகார் மனுவில், நான் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நிலுவையில் இருக்கும் பட்சத்தில் குறிப்பாக தனிப்பட்ட ஒரு நபர் அரசுக்கு சொந்தமான குளம் மற்றும் களம் ஆகிய நிலத்தினை தணிகை ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் கிள்ளிவளவன் மற்றும் முனியாண்டி ஆகியோர் மேற்கண்ட அரசுக்கு சொந்தமான நிலங்களை முறைகேடாக ரெட்ஹில்ஸ் சார்பதிவாளர் அலுவலகத்தில் சுமார் 5 ஏக்கர் நிலத்தினை கோமதி அம்மன் நகர் என்ற பெயரில் பத்திர பதிவு செய்யதுள்ளனர்.

 

தணிகை ரியல் எஸ்டேட் கிள்ளிவளவன்

கிள்ளிவளவன் அவர்களால் அரசுக்கு சொந்தமான நிலத்தினை முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு மேலும் அரசுக்கு சொந்தமான நிலங்களில் மனைப்பிரிவு அமைத்து விற்பனை செய்துள்ள  கிள்ளிவளவன் மற்றும் முனியாண்டி ஆகியோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், மேலும் அரசுக்கு சொந்தமான மேற்கண்ட புல எண்களில் அடங்கிய நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பினை அகற்றிட வேண்டும் என பத்திரப்பதிவு துறை தலைவர், மாவட்ட பாதிவாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும்  மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி , கோட்டாட்சியிர் மற்றும் வட்டாட்சியிர் ஆகியோருக்கு பதிவு தபால் மூலம் புகார் மனு அளித்துள்ளார்.

 

அதைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் துறை அதிகாரி அவர்களின் உத்தரவின் படி விளாங்காடுபாக்கம் கிராம நிர்வாக அலுவலர், செங்குன்றம் வருவாய் ஆய்வாளர் மற்றும் பொன்னேரி நில அளவையர் ஆகியோர்கள் முறைகேடாக பத்திரப்பதிவு செய்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சர்வே எண் கொண்ட நிலங்களை ஆய்வு செய்து, பொன்னேரி வட்டாட்சியர், பொன்னேரி கோட்டாட்சியர், மாவட்ட வருவாய்துறை அதிகாரி மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு ஆய்வு செய்த அறிக்கையை கொடுத்துள்ளனர்.

மேலும் பதிவுத்துறை தலைவர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பதிவுத்துறை அதிகாரி அவர்களின் சுற்றறிக்கையின் படி ரெட்ஹில்ஸ் சார்பதிவாளர் அவர்களுக்கு மேலே குறிப்பிட்ட அரசுக்கு சொந்தமான சர்வே எண் கொண்ட நிலத்தினை முறைகேடாக பத்திர பதிவு செய்த சார் பதிவாளர்கள் விவரத்தையும் கூறியுள்ளனர்.

தணிகை ரியல் எஸ்டேட்

இன்னும் ஓரிரு வாரங்களில் முறைகேடாக பத்திர பதிவு செய்த செங்குன்றம் சார்பதிவாளர்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் முறைகேடாக வீட்டு மனை பிரிவு அமைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக, தணிகை ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் கிள்ளிவளவன் மற்றும் முனியாண்டி அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து கைது செய்து செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.

அப்பகுதியில் கிள்ளிவளவன் சுமார் 50 ஏக்கருக்கு மேல் மனைப்பிரிவு அமைத்து விற்பனை செய்து வருகிறார். அப்பகுதியில் தொடர்ந்து அரசு புறம்போக்கு நிலங்களை இணைத்து மனைப்பிரிவினை அமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அரசு புறம்போக்கு நிலங்களை மனைப்பிரிவு அமைத்து விற்பனை செய்ய ரெட்ஹில்ஸ் சார்பதிவாளர் அதிகாரிகளும், பொன்னேரி வருவாய்த்துறை அதிகாரிகளும் பெரும் தொகைகளை பெற்றுள்ளனர்.

 

மேலும் விளாங்காடுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது போலி ஆவணம் மூலம் மனைப்பிரிவு அமைத்து விற்பனை செய்வது வழக்கமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் விளாங்காடுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலங்கள் வாங்க அச்சமடைந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் தொடர்ந்து அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து, போலி ஆவணம் மூலம் விற்பனை செய்யும் விளாங்காடுபாக்கம் ஊராட்சியை சேர்ந்த பெரும் புள்ளிகள் சிக்குவார்கள் என அப்பகுதி மக்கள் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

இதையும் படிங்க.!