chennireporters.com

சென்னையில் 180 டன் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்.

தமிழகத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை போன்ற பெருநகரங்களில் சைதாப்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர்,
திநகர் ,மாம்பலம், சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை கொளத்தூர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகள் தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

பல இடங்களில் முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவை தானே சாப்பிட்டு பார்த்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்.

அது தவிர பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் தண்ணீர் தேங்கியுள்ள பல பகுதிகளில் தண்ணீர் வெளியேறாமல் இருப்பதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

பொதுமக்கள் பயன்படுத்தும் குளிர்பானங்கள் தண்ணீர் பாட்டில்கள் போன்ற பிளாஸ்டிக் பாட்டில்களை குப்பைத் தொட்டியில் போடாமல் கால்வாய்களில் போடுவதால் தண்ணீர் பாதாள சாக்கடையில் செல்லாமல் தேங்கி நிற்கிறது.

மாம்பலத்தில் மட்டும் 180டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகரத்தின் அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் கழிவுகள் டன் கணக்கில் தேங்கிக் கிடக்கிறது.

பொதுமக்கள் சமூகத்தின் நலன் கருதி குப்பைகளை குப்பை தொட்டியிலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் அதை சுகாதார பணியாளர்கள் இடம் வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அரசின் மீது குறை சொல்வதைவிட பொதுமக்களும் சமூக நலன் கருதி குப்பைகளையும் பிளாஸ்டிக் பொருட்களையும் தனித்தனியாக பிரித்து சுகாதார பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

பிளாஸ்டிக் குப்பைகளால் பல இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.மேற்கு மாம்பலத்தில் மட்டும்180 டன் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!