திருவள்ளூர் மாவட்ட தனி பிரிவு போலீசார் அதிரடி மாற்றம் மாவட்ட எஸ்பி நடவடிக்கை திருவள்ளூர் மாவட்ட மக்கள் தீபாவளி கொண்டாட்டம். திருவள்ளூர் மாவட்டத்தில் 5 போலீசார் பணியிடை மாவட்ட மாறுதல் மாற்றம்.
ஐஜி அஸ்ரா கார்க்
திருவள்ளூர் மாவட்ட எஸ் பி அலுவலகத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் பார்த்திபன், திருவள்ளூர் நகர காவல் நிலைய தனிப்பிரிவு போலீஸ் பிரபாகரன் திருப்பத்தூர் மாவட்டத்திற்கும்,
வெங்கல், மப்பேடு ,ஆர் கே பேட்டை ஆகிய காவல் நிலையம் தனிப்பிரிவு போலீசார் கமலநாதன் ,கணேசன் ,நடராஜன் கடலூர் மாவட்டத்திற்கும் பணி மாற்றம்
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள்
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் அதிரடி உத்தரவு. இவர்கள் அனைவரும் நிர்வாக காரணங்களுக்காக பணி மாறுதல் செய்யப்பட்டதாக உத்தரவு பிறப்பித்து இருந்தாலும் தீபாவளிக்கு பட்டாசு பரிசு பொருட்கள் பெற்றதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.
ஏற்கனவே வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தீபாவளி பண்டிகை முன்னிட்டு போலீசார் யாரிடமும் எந்தவிதமான இலவச பட்டாசு பரிசு பொருட்களோ பெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்திருந்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தனிப்பிரிவு அலுவலகத்தில் நீண்ட காலமாகவே சாதி அடிப்படையில் போலீசார் பணிபுரிந்து வருகின்றனர்.
மாவட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே வன்னிய சமூகத்தைச் சார்ந்த அதிகாரிகளும் மற்ற சமூகத்தை சார்ந்தவர்களே அதிகமாக பணியாற்றி வந்தனர். அவர்கள் வேலை செய்யும் காவல் நிலையங்களில் அவர்கள் வைத்தது தான் சட்டம் என்ற நிலை இருந்து வந்தது. தற்போதும் இருந்து வருகிறது.
தலிச் சமூகத்தை சார்ந்தவர்கள் தனிப்பிரிவில் இடம்பெறுவது குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது. அப்படியே இருந்தாலும் குறைந்த அளவில் தான் இருப்பார்கள். பொதுவாக ஒவ்வொருவரும் ஏறக்குறைய 20 ஆண்டுகாலம் தனிப்பிரிவிலேயே பணியாற்றி வருகின்றனர். இதனால் அவர்கள் பணிபுரியும் காவல் நிலையத்தில் லஞ்சம் அதிக அளவில் நடைபெறுகிறது. சட்டத்திற்கு புறம்பான செயல்களும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. எனவே தனி பிரிவில் பணியாற்றுபவர்களை உடனடியாக தனிப்பிரிவில் இருந்து முற்றிலும் முழுவதுமாக நீக்கி சட்டம் ஒழுங்கு பிரிவிலோ அல்லது குற்றப்பிரிவிலோ அவர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுவாக எழுந்து வருகிறது .
எனவே வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அவர்கள் பதவி ஏற்ற பிறகு தமிழகம் முழுவதும் பல்வேறு அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக திருவள்ளூரில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது எனவே குற்றப் பின்னணி உடைய தனிப்பிரிவில் பணியாற்றும் காவலர்களை உடனடியாக பணி நீக்கம் செய்யவேண்டும் அவர்கள் மீது துறை ரூதியான நடவடிக்கை எடுப்பது மட்டுமில்லாமல் அவர்கள் அவர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என்கின்றனர் சில நேர்மையான அதிகாரிகள்.
தற்போது மாற்றப்பட்டுள்ள ஐந்து பேரும் லஞ்சம் வாங்குவதில் பெயர் பெற்றவர்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே சிறப்பாக லஞ்சம் வாங்குவதில் திறமையானவர்கள் என்று விருது வழங்கவேண்டும் என்கின்றனர். சிலர் திருவள்ளூர் உட்கோட்டத்தில் பணியாற்றி வந்தனர் தீபாவளி சமயத்தில் இவர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டது திருவள்ளூர் மாவட்ட போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய வருகிறது. எஸ்.பி. சீனிவாச பெருமாளின் உத்திரவாள் தீபாவளி கொண்டாட முடியாமல் போய்விட்டதே என்கின்றனர் லஞ்சம் வாங்கிய காக்கிகள்.