chennireporters.com

#Diwali; தீபாவளி வசூல் வேட்டை; அள்ளி சுருட்டிய அரசு அதிகாரிகள்.

தமிழகத்தில் இனி எப்போதும் லஞ்சத்தை ஒழிக்கவே முடியாது என்பதற்கு சாட்சி இந்த தீபாவளி பண்டிகை.

அதேபோல பொங்கல், ஆங்கில புத்தாண்டு, ஆயுத பூஜை போன்ற விழா நாட்களிலும் அரசு அதிகாரிகள் பரிசுகள் என்கிற பெயரில் பிச்சை எடுப்பதும் லஞ்சம் வாங்குவதும் பெருமையாகவே கருதுகிறார்கள். தமிழகத்தில் லஞ்சம் வாங்குவதில் முதலிடம் வகிப்பது போலீசார், இரண்டாவது இடம் போக்குவரத்து துறை, நான்காவது பத்திரப்பதிவு துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கலெக்டர் அலுவலகங்கள் உள்பட தவிர நகராட்சி பேரூராட்சி ஊராட்சி ஒன்றியங்கள் என இவைகள் தான் முதலிடங்கள் வகிக்கின்றன இதில் மிரட்டி பிச்சை எடுப்பது போலீசார் தான்.Officials taking bribes; லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் தங்களை திருத்தி கொள்ள  வேண்டும். - chennireporters.comவசூல் வேட்டை தொடங்கிய அரசு அதிகாரிகள்.

தீபாவளி போன்ற காலங்களில் தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு தீயணைப்புத்துறையினர் பணமும் பட்டாசும் பரிசாகப் பெறுகின்றனர். இவர்களுக்கு தீபாவளி நேரங்களில் மட்டும் தான் அதிக அளவில் லஞ்சம் வரும் மற்ற துறைகளுக்கு வருடம் முழுவதும் அவர்கள் காட்டில் பண மழை தான்.

நேர்மையாக பணியாற்றும் ஒரு சில அதிகாரிகளைத் தவிர பொதுமக்களின் வரிப்பணத்தை சம்பளமாக பெறுவது மட்டுமில்லாமல் அதில் குடும்பம் நடத்தவும் வைப்பாட்டிகளுக்கு வீடும் வசதியும் செய்து தர முடியாது என்பதால் லஞ்சம் வாங்குவதில் அவர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். எனவே லஞ்சம் வாங்கினால் தான் தனது சின்ன வீடும் பெரிய வீடும் சுகமாக வாழ முடியும் என்று பெரும்பாலான அதிகாரிகள் நினைக்கின்றனர்.Way2News Tamilசராசரியாக விழா காலங்களில் ஒவ்வொரு துறைகளிலும் குறைந்தபட்சம் கோடிகளைத் தாண்டுகிற அளவிற்கு லஞ்சம் வசூல் செய்து வாங்கி குவிக்கின்றனர்.

குறிப்பாக தீபாவளி போன்ற நேரங்களில் அந்தந்த காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இனிப்பு கடைகள், பட்டாசு கடைகள், துணிக்கடைகள், ஹோட்டல் முதலாளிகள், ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள், கிரானைட் தொழில் அதிபர்கள் என பலரிடம் அன்பாகவும் சிலரிடம் பிச்சையாகவும் சிலரிடம் மிரட்டியும்  போலீசார் வாங்குவார்கள்.தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!பெரும்பாலும் அரசுத் துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதற்கு காரணமாக அமைவது பத்திரிகையாளர்களே என்கிற குற்றச்சாட்டு நெடுங்காலமாக உள்ளது. தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்கள் தவறு செய்யும் அதிகாரிகள் பற்றி அவர்களிடம் லஞ்சம் வாங்காமல் எந்த உதவிகளையும் பெறாமல் வெளிப்படை தன்மையோடு செய்திகளை வெளியிட்டால் லஞ்சம் ஓரளவு குறையும். எழுதப் படிக்கத் தெரியாத சில தற்குறிகள் சில ரியல் எஸ்டேட் புரோக்கர்கள்,  செய்யும் புரோக்கர்கள் ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து செய்யும் அரசியல்வாதிகளிடம் மாதம், மாதம் அல்லது விழா காலங்களிலும் அன்பளிப்பு என்கிற பெயரில் கையேந்தி நிற்பதால் தான் லஞ்சத்தை ஒழிக்கவே முடியவில்லை என்கின்றனர் சில கவர் வாங்காத நேர்மையான பத்திரிகையாளர்கள்.Read all Latest Updates on and about மிரட்டி வசூல் வேட்டைகுறிப்பாக தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் பணியாற்றும் எழுதப் படிக்கத் தெரியாத டுபாக்கூர்கள்தான் தங்களுக்கான வசதி வாய்ப்பை பெருக்கிக் கொள்கின்றனர். கோயம்புத்தூர் மாவட்டம் திருப்பூர் அருகே உள்ள பல்லடம் பகுதியில் சேர்ந்த நியூஸ் 7 செய்தியாளர் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அவர் லஞ்சம் கேட்டதாலே நடந்தது என்பதை அனைவரும் அறிவர்.

 

அதேபோல தமிழ்நாடு முழுவதும் தற்போது குறிப்பிட்ட அந்த செய்தி நிறுவனத்தில் உள்ள நியூஸ் 7 பத்திரிகையாளர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதிலும் புரோக்கர் வேலை செய்வதிலுமே தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கின்றனர் என்கிற ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தீபாவளி பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்!ஆவடி மாநகர காவல் துறையில் ஆவடியில் உள்ள தொழிலதிபர்களிடம் பணமும் பட்டாசு பன்டல்களும் வாங்கி உள்ளனர்.  அதே போல டாஸ்மார்க் பார்கள், தொழில்துறை நிறைந்த பகுதிகள், அம்பத்தூர், மாதவரம், ரெட்டில்ஸ் போன்ற வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளில் வசூல் வேட்டையில் வாரி குவித்துள்ளனர் இது ஆவடி மாநகர போலீஸ் கமிஷ்னர் சங்கர் அவர்களுக்கு தெரியுமா என்பது கேள்வி குறிதான்.Proactive policing, effective grievance redressal key to overcoming  suburban challenges: Avadi CoP Shankarஉளவுத்துறை அதிகாரிகள் கமுக்கம் நோட்டு போடாமல் அவருகளும் நோட்டு வாங்கினார்கள் என்பது தான் சிறப்பு செய்தி. பிச்சை எடுப்பதிலே பெயர் பெற்ற திருவள்ளூர் மாவட்ட போலீசார் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரொம்ப அதிகம் என்கிறார்கள. மாவட்ட தனிப்பிரிவில் பெரிய அளவில் கல்லா கட்டினார்கள் என்று சந்தோசத்துடன் சொல்கிறார்கள்.லஞ்ச ஒழிப்புத்துறை என்பது தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகள் ஊழல் செய்வதை தடுக்க உருவாக்கப்பட்ட துறையாகும். இது லஞ்சம் வாங்குதல் அரசு ஊழியர்களின் தவறான நடத்தை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவற்றை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் துறையாகும்.

இந்தத் துறையின் முக்கிய வேலை அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல்களை கண்டறிந்து தடுப்பதாகும். ஆனால் இந்தத் துறையே ஊழலில் நிறைந்து கிடக்கிறது. அரசு அதிகாரிகளிடம் சோதனைக்கு செல்வதற்கு முன்பே தகவல் சொல்லி தங்களுடைய பாக்கெட்டை நிரப்பி கொள்ளுகிறார்கள் என்கின்றனர் அரசுத்துறை அலுவலர் சங்கங்கள். வேலியே பயிரை மேய்ந்த கதையாக தான் இருக்கிறது. நரகாசுரனை அழித்தது தான் தீபாவளி பண்டிகை  கொண்டாடப்படுகிறது. அரசுத்துறை அதிகாரிகளின் ஊழலை எப்போது அழிக்கப் போகிறோம் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.CrackersBox - Crackers Shop in Namakkal | Diwali Shoppingதமிழகம் முழுவதும் தீபாவளி வசூல் வேட்டையில் போலீசார் கல்லா கட்டினார்கள் என்று சொன்னாலும் கூட பெரும்பாலான மாவட்டங்களில் டாஸ்மாக் பார்க் மற்றும் தனியார் ஹோட்டல்களில் இயங்கும் கார்களில் ஓசியில் சரக்கும் வாங்கினார்கள் என்பது தான் இந்த வருடத்தின் தீபாவளி சிறப்பு செய்தி.

இதையும் படிங்க.!