புழல் திமுக சேர்மன் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் பதவிக்கு வந்ததும் அமைதிப்படை அமாவாசை மாதிரி அள்ளி குவிச்சிட்டார் என்று உள்ளூரில் பரவலான பேச்சு உடன் பிறப்புகளிடமிருந்து பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மனைவி சேர்மனாக இருந்தாலும் அலுவலகத்தில் புகுந்து ஆளின் ஆல் எல்லா வேலையும் திருமால் தான் செய்து வருகிறார். சொந்த கட்சிக்காரர்களிடமே கறா ராக பணம் கேட்டு நச்சரிக்கிறார் என்று திமுக தலைமைக்கு புழல் பகுதியை சேர்ந்த உடன்பிறப்புகள் சிலர் புகார் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். இந்த செய்தி தான் தற்போது புழல் பகுதி திமுகவினரிடத்தில் பெரும் பேச்சாக இருந்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது புழல் ஊராட்சி ஒன்றியம். புழல் ஊராட்சி ஒன்றிய சேர்மன் தங்கமணி தற்போது கோடிகளில் புரளுவதாக கூறப்படுகிறது. கடந்த 2019ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க சார்பாக ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்று, பின்பு தங்கமணி சேர்மனாக பதவி ஏற்றார். சேர்மன் பதவி ஏற்பதற்கு முன் சாதாரண வீட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவர் தற்போது புது வீடு, சொகுசு கார் என சொகுசான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்.
புழல் திமுக சேர்மன் தங்கமணி
புழல் ஊராட்சி ஒன்றியத்தில் கொடுக்கப்படும் கட்டிட வரைபடம் மற்றும் மனைப்பிரிவுகளுக்கு இதுவரை பல கோடி வரை லஞ்சமாக தங்கமணியின் கணவர் திருமால் பெற்றதாக கூறப்படுகிறது. லஞ்சம் பணம் பெறுவதற்காகவே புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஈஸ்வரி என்ற பெண்ணை எந்த அரசு அனுமதி இல்லாமல் தினக்கூலி அடிப்படையில் பணிக்கு அமர்த்தி பல கோடி ரூபாய் லஞ்சமாக இதுவரை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25/04/2024 அன்று பதினொரு மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறை புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சோதனை நடத்தியது. அதில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் FIR போடப்பட்டுள்ளது. அப்போது புழல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக பணிபுரிந்த மணி சேகர் என்பவரை சேர்மன் தங்கமணியின் கணவர் திருமால், எருமை வெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த திருமாலின் புரோக்கர் வீரா மற்றும் ஈஸ்வரி ஆகியோர் திட்டமிட்டு பணத்தை தாங்களே புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து விட்டு லஞ்ச ஒழிப்பு துறையில் மணி சேகரை சிக்க வைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ஈஸ்வரியே தனது கையால் வீரா கொடுத்த பணத்தை வாங்கி ஆபிஸ் பீரோவில் வைத்துள்ளார்.
தினக்கூலி ஊழியர் ஈஸ்வரி
அந்த வழக்கில் போடப்பட்ட FIR ல் தினக்கூலி ஊழியர் ஈஸ்வரி பெயரும் இடம் பெற்றுள்ளது. அதனால் ஈஸ்வரி தற்காலிகமாக அப்போது பணியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் மணி சேகர் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
திருமாலின் புரோக்கர் வீரா
இந்நிலையில் மீண்டும் ஈஸ்வரியை சேர்மன் தங்கமணியின் கணவர் திருமால் அவர்கள் வலுக்கட்டாயமாக அழைத்து வந்து புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரண்டு தினங்களுக்கு மீண்டும் தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு பணியமர்த்தியுள்ளார். மேலும் எருமை வெட்டி பாளையத்தைச் சேர்ந்த திருமாலின் புரோக்கர் வீரா மூலம் இதுவரை லஞ்சமாக பெற்ற பல லட்சம் பணம் அனைத்தையும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சேர்மன் தங்கமணி, திருமால், வீரா மற்றும் ஈஸ்வரி ஆகிய மூவரின் கூட்டணி ஆட்டம் மீண்டும் புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆரம்பித்துள்ளது.
புழல், விளாங்காடு பாக்கம், தர்காஸ், மல்லிமா நகர், கண்ணம்பாளையம், சிறுங்காவூர், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. பல்வேறு பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட் மனைப்பிரிவை அமைத்து விற்பனையை தொடங்கி வருகிறது. இடத்தை லேஅவுட் போடாமல் தங்கமணியின் கணவர் திருமால் உதவியுடன் புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்டிட வரைபடம் அனுமதி வழங்கி அதன் மூலம் பல லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்று வருகின்றனர்.
சேர்மன் தங்கமணியின் கணவர் திருமால்
சொந்தக் கட்சிக்காரர்கள் ஏதாவது சிபாரிசு கேட்டு வந்தால் அவர்களிடமே திருமால் கறாராக பணம் கேட்டு நச்சரிப்பதாக உடன்பிறப்புகள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். இவர் பதவிக்கு வருவதற்கு முன் எப்படி இருந்தார் என்பது எங்களுக்கு தெரியாதா? எல்லாத்தையும் மறந்துட்டு அமைதிப்படை அமாவாசை மாதிரி ஆளு நடந்துக்கிறார் என்ற வகையில் கட்சிக்காரர்கள் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் சிலர் திமுக தலைமைக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளனர். இந்த புகார் கடிதத்தில் பல்வேறு முக்கிய செய்திகள் புகாராக எழுதப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் திருமாலின் புரோக்கர் எருமை வெட்டி பாளையத்தை சேர்ந்த வீராவுக்கு உள்ள சொத்துக்கள் குறித்தும் அதில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் பல்வேறு மாநகராட்சி மேயர்களை முதல்வர் அதிரடியாக நீக்கி வருகிறார். அந்த வகையில் புழல் ஊராட்சி ஒன்றிய சேர்மன் தங்கமணியின் பதவியும் நீக்கப்படுமா என்கிற பேச்சு தற்போது அந்தப் பகுதியில் எழுந்து வருகிறது.
சேர்மன் தங்கமணியின் கணவர் திருமாலின் புரோக்கர் எருமைவெட்டி பாளையத்தை சேர்ந்த வீராவின் சொத்து மதிப்பு சில கோடிகளை தாண்டும் என்கின்றனர். அதாவது சோழவரம் அடுத்த ஆங்காடு அருகே உள்ள செம்புலிவரத்தில் உள்ள kvt avenue வில் பல லட்சம் மதிப்புள்ள பிரமாண்டமான வீடு மற்றும் கார், புழல், ரெட்டில்ஸ் பகுதியில் பல பிளாட்டுகள் வாங்கி வைத்துள்ளதாக கூறுகின்றனர் புழல் பிடிஒ அலுவலக ஊழியர்கள் சிலர். அதே போல தினக்கூலி ஊழியர் ஈஸ்வரியின் சொத்து மதிப்பு பல லட்சங்களை தாண்டும் என்கின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கும் என்கின்றனர் அதிகாரிகள்.