நீலகிரி திமுக எம்பி ஆ.ராசா தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பேருந்து நிழற்குடை அமைக்க 7 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் திட்ட மதிப்பில் பேருந்து நிழற்குடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒதுக்கப்பட்ட நிதியில் 2 லட்சம் ரூபாய் கூட மதிப்பில்லாத ஒரு பேருந்து நிழற்கொடையை கூடலூர் நகராட்சி நிர்வாகம் 7 லட்சத்து ஐம்பதாயிரம் என்று பில் போட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி திமுக எம்பி ஆ.ராசா
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை அருகே அமைந்துள்ளது கூடலூர் 2 நகராட்சி. இந்த நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் 27 வது வார்டு தெற்கு பாளையம் நிழற்குடை அமைக்க எம் பி ஆ.ராசா தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 7,50,000 ஒதுக்கப்பட்டது மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த பணி நடைபெற்றது. நிழற்குடையும் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த பேருந்து நிழற் கொடையை எந்தவித தரமான பொருட்களைக் கொண்டு அமைக்கவில்லை. இந்த பேருந்து நிழற்குடை அமைக்க இரண்டு லட்ச ரூபாய் கூட செலவாகி இருக்காது என்று உடன்பிறப்புகளும் கிராம பொதுமக்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த உடன் பிறப்புகள் சிலர் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்திற்கும் புகார் அனுப்பியுள்ளனர்.
திமுக கட்சி தலைவர் ஸ்டாலின்
அது தவிர தகவல் அறியும் உரிமை சட்டத்திலும் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை என்ற உடன்பிறப்பு கூறுகையில் எங்கள் கிராமத்தில் நீண்ட நாட்களாக பேருந்து நிழற்கொடை இல்லை.எம்பி அவர்களிடம் மனு கொடுத்தோம். அதன் பிறகு பேருந்து நிழற்குடைய அமைக்க அவர் நிதி ஒதுக்கி உத்தரவிட்டார்.
அதன் பெயரில் மூன்று மாதங்களுக்கு முன்பு திமுக நகர்மன்ற தலைவர் அறிவரசு அவரது ஆதரவாளர்கள் இந்த பேருந்து நிழற்கொடையை கட்டினார்கள். தரம் இல்லாத பொருட்களைக் கொண்டு கட்டினார்கள். ஏறக்குறைய 2 லட்சம் ரூபாய் கூட செலவாகி இருக்காது. மக்கள் பணத்தை எப்படி அநியாயமாக கொள்ளையடிக்கிறார்கள் என்று ஆதங்கப்பட்டார். சம்பந்தப்பட்ட நகராட்சித் தலைவர் அவர்களை தொடர்பு கொண்டோம் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.
திமுக நகர்மன்ற தலைவர் அறிவரசு
தமிழ்நாடு முழுவதும் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி பேரூராட்சி என உள்ளாட்சி நிர்வாகங்களில் திமுகவினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் மக்களுக்கான பணிகளை சிறப்பாக செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது தவிர அவர்கள் உள்ள பகுதியிலேயே தரமான சாலைகள் மின்விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகளை தரமானதாக செய்து தரவில்லை. இதனால் வரும் காலத்தில் தேருதல் நேரத்தில் திமுகவிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்கின்றனர். அந்தப் பகுதி பொதுமக்கள் எனவே அந்த பேருந்து நிழற்கொடையை தரமான பொருட்களால் மீண்டும் மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். தெற்கு பாளையும் 27 வது வார்டு பொதுமக்கள்.
இதுகுறித்து கேள்வி கேட்ட சில பொதுமக்களை நகர் மன்ற தலைவர் மிரட்டியதாகவும் அந்தப் பகுதியில் சமூக வலைதளங்களில் ஒரு சிலர் இது குறித்து கருத்து தெரிவித்ததால் அந்தப் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்த பத்துக்கும் மேற்பட்ட கடைகளை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி விடியற்காலையில் அடித்து உடைத்து கடைகளை காலி செய்து விட்டனர் நகராட்சி நிர்வாக அதிகாரிகள். கேள்வி கேட்டால் அடக்கு முறையை ஏவி ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிப்பது எந்த வகையில் நியாயம் என்கின்றனர்.
முதலில் இந்த பேருந்து நிழற்குடையில் எம் பி யின் பெயரும் கூடலூர் நகர்மன்ற தலைவர் பெயரும் அந்த பேருந்து நிழற்குடையின் திட்ட மதிப்பீடும் போடாக வைக்கப்பட்டிருந்தது. உள்ளூர் உடன்பிறப்புகள் சமூக வலைதளத்தில் இது குறித்து கமெண்ட் அடித்த போது போர்டு நீக்கப்பட்டது. தற்போது மொட்டையாக நடுரோட்டில் போடப்பட்ட இரும்பு கொட்டகை போல காட்சியளிக்கிறது இந்த பேருந்து நிழற் குடை.