15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்திய வழக்கில் தொடர்புடைய திமுக பிரமுகர் முன்னாள் திமுக இளைஞரணி மாவட்ட நிர்வாகி முன்னாள் ஊராட்சி மன்றத்தில் தலைவர் முதல்வரின் பண்ணை வீடு பாதுகாவலராக இருந்த ரமேஷ் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் உடன் உளுந்தை ரமேஷ்.
சென்னை கோயம்பேட்டில் 14 வயது மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்த பூங்கொடி நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த பாரதி கண்ணன் திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் உளுந்தை ரமேஷ் உள்பட எட்டு பேர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உளுந்தை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் திமுக.
அவர்கள் அனைவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கைதான பாரதி கண்ணன் சினிமா துணை நடிகர் மற்றும் உதவி இயக்குனராக உள்ளார். இவர் தான் பூங்கொடி மூலம் மாணவியை வசதி படைத்த வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி பாலியல் தொழில் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்தது. 
திமுக தலைவர் ஸ்டாலின் உடன் உளுந்தை ரமேஷ்.
இந்த நிலையில் சினிமா துணை நடிகர் பலர் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த உளுந்தை கிராமத்தில் தமிழக முதலமைச்சருக்கு பண்ணை வீடு இருக்கிறது. அந்தப் பண்ணை வீட்டை தான் பாதுகாத்துக் கொள்கிறேன் நான் துர்கா அம்மாவின் கிச்சன் வரை சென்று பேசி வருவேன் என்று திருவள்ளூர் முழுவதும் உள்ள அரசு அதிகாரிகளை மிரட்டி வந்தவர்.

செங்காடு ராஜசேகர்.
இந்த உளுந்தை ரமேஷ் மேலும் அந்தப் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயர் சொல்லி ஸ்கிராப் பிஸ்னஸ் செய்து வருகிறார். அது தவிர அவரது நண்பரான செங்காட்டை சேர்ந்த ராஜசேகர் என்பவர் தொழில் முறை கூட்டாளியாக இருந்து வருகின்றார்.

இவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூரில் அலுவலகம் வைத்து கொரியாவை சேர்ந்த கம்பெனியின் முக்கிய விஐபிகளுக்கு, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மாநிலங்களை சேர்ந்த அழகிய பெண்களை அவர்களுக்கு சப்ளை செய்து தங்களுடைய பிசினஸை வளர்த்துக் கொண்டனர். ஏற்கனவே ரமேஷ் மீது பல்வேறு வழக்குகள் மப்பேடு காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இவரது குற்ற செயல்கள் குறித்து மாவட்ட செயலாளர் மற்றும் திமுக பிரமுகர்கள் தலைமைக்கு பல புகார் கடிதம் அனுப்பினர்.

செங்காடு ராஜசேகர்.
அதேபோல உளவுத்துறை போலீசாரும் தனியாக அறிக்கை ஒன்றை தயார் செய்து அனுப்பினர். அதன் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திமுகவின் கட்சிப்பதவியிலிருந்து ரமேஷை நீக்கிவிட்டனர். இருப்பினும் தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் முதலமைச்சரின் மனைவி துர்கா ஆகியோரின் பெயரை பல தொழிற்சாலைகளில் அவர் தவறாக பயன்படுத்தி பல கோடி ரூபாய் பணம் முறைகேடாக சம்பாதித்ததாக கூறப்படுகிறது. 
அன்பில் மகேஷ் உடன் உளுந்தை ரமேஷ்.
செங்காடு பகுதியை சேர்ந்த ராஜசேகருக்கு மிகவும் வறுமையில் வாடிய குடும்பம் தற்போது கோடிகளில் மிதந்து வருகிறார். இவர் உளுந்தை ரமேஷின் நண்பர் மட்டும் இல்லாமல் தொழில்முறை கூட்டாளியாகவும் இருந்து வருகிறார். கோயம்பேட்டில் நடைபெற்ற இந்த விபச்சாரத்தில் செங்காடு பகுதியை சேர்ந்த ராஜசேகரனையும் போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜசேகரன் தலைமறைவாகிவிட்டார்.
ராஜசேகரன் மற்றும் உளுந்தை ரமேஷின் நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
இந்த செய்தி தொடர்பாக உளுந்து ரமேஷ் மற்றும் ராஜசேகர் தரப்பினர் அவர்களது கருத்தை தெரிவித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.
