#minister nasser was excited ; மாஸ் காட்டிய திமுகவினர். அதிர்ந்தது ஆவடி. உற்சாகத்தில் அமைச்சர் நாசர்.

April 20, 2026

By தேவா ஹேமா

தமிழக தேர்தல் களம் கோடை வெயிலில் குடைந்து எடுத்தாலும் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் அனல் பறக்கிறது.

இந்த நிலையில் ஆவடி தொகுதியில் அமைச்சர் நாசரின் நலம் விரும்பிகள் திமுகவினர், தொண்டரணியினர், இளைஞர் அணியினர், மகளிர் அணியினர் மற்றும் அவரது நலம் விரும்பிகள் என அனைத்து அணியினரும் ஒன்று திரண்டதால் ஆவடிஅதிர்ந்து போனது.நேற்று காலை 11 மணியளவில் திமுக வேட்பாளர் அமைச்சர் நாசரை ஆதரித்து திமுகவின் கூட்டணி கட்சியினர் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மையம், கம்யூனிஸ்ட், தேமுதிக போன்ற கட்சி தொண்டர்கள் திருமுல்லைவாயிலில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினர்.  மோட்டார் பைக்கில் கொடி கட்டி ஊர்வலமாக ஆவடி நோக்கி வந்து திருநின்றவூரில் பிரச்சாரத்தை முடித்தனர் இதனால் ஏறக்குறைய ஒரு மணி நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

காலை 11 மணி முதலே வெயில் மண்டையைப் பிளந்தாலும் தொண்டர்கள் திமுக தொப்பி, திமுக டவல் அணிந்து தனது பைக்கில் திமுக கொடி கட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

திறந்த ஜீப்பில் வாக்கு கேட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கிய அமைச்சர் நாசருக்கு பொதுமக்கள் பலத்த வரவேற்பை அளித்தனர் ஆரத்தி எடுப்பது பட்டாசு வெடிப்பது மாலை அணிவிப்பது என அடித்து தூள் கிளப்பினர் கூட்டத்தைப் பார்த்து பிரமித்துப் போன அமைச்சர் நாசர் உற்சாகத்தில் காணப்பட்டார்.

திமுக தொண்டர்களும் கூட்டணி கட்சியினரும் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருமுல்லைவாயல், அண்ணன் ஊர், ஆவடி, பட்டாபிராம், நெமிலிச்சேரி வழியாக ரோட் ஷோ நடத்தியதைப் போல பிரம்மாண்டமாக இந்த தேர்தல் பிரச்சார பேரணி அமைந்தது. திருநின்றவூரில் பிரச்சாரத்தை முடித்தனர். பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி பாடப்பட்ட பாடல்களும் பிரச்சார பேச்சுக்களும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது என்று திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர். 

ஆவடி தொகுதி இளைஞர் அணி செயலாளர் ஆசிம் ராஜா.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் தேர்தல் வேலைகளையும் ஆவடி தொகுதி இளைஞர் அணி செயலாளர் ஆசிம் ராஜா மிகச் சிறப்பாக செய்தார் என்று கூட்டணி கட்சியினர் பாராட்டு தெரிவித்தனர்.

Share:

தேவா ஹேமா

April 20, 2026

Leave a Comment