chennireporters.com

கலெக்டருக்கு தெரியுமா கமிஷன் மேட்டர்?

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவில் வேலை பார்ப்பவர் கணேசன்(H.S).இவர் கடந்த ஒரு வருடமாக இந்த பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இவர் ஏற்கனவே இந்த பிரிவில் இரண்டு வருடங்களாக வேலை செய்து அனுபவம் உள்ளவர்.

2016 ம் ஆண்டு திருத்தணியில் தாசில்தாராக பணியாற்றிய போது லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒரு புகார் நிலுவையில் உள்ளது.

கலெக்டர் பொன்னையா காஞ்சிபுரத்திலிருந்து திருவள்ளூர் வந்ததும் கணேசனை நிர்வாகப் பிரிவிற்கு பணியமர்த்தப்பட்டார்.கடந்த ஒரு வருட காலமாக இவர் இந்த பிரிவில் பணியாற்றி வருகிறார்.

கலெக்டர் பொன்னையா

திருவள்ளூர் மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக ஆல்ஃபி ஜான் வர்கீஸ் பதவியேற்றதும் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி 12 தாசில்தார்கள் பணி மாற்றம் செய்யப்பட்டனர்.

அதில் பெரும்பாலோனோர் கணேசனுக்கு வேண்டப்பட்ட தாசில்தார்களுக்கு வருமானம் அதிகம் உள்ள தாலுக்காகளுக்கு போஸ்டிங் போட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு திருவள்ளூர் மாவட்ட வருவாய்த்துறை சங்கம் சார்பில் ஒரு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

அது தவிர 2018ம் ஆண்டு பேனல் சீனியர் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் 40 பேருக்கு போஸ்டிங் போடப்பட்டது.அதில் கணேசனுக்கு கப்பம் கட்டிய பிறகுதான் வருமானம் அதிகமுள்ள பகுதிகளுக்கு போஸ்டிங் போட்டார் என்கிறார்கள்.

கணேசன். H.S

இது தவிர துனை தாசில்தார் (D.T) யாக போஸ்டிங் வழங்கப்பட்ட திலும் பணம் விளையாடி இருக்கிறது என்கிறார்கள்.இதுதொடர்பாக H.S கணேசன் அவர்கள் தரப்பு விளக்கத்தை கேட்டோம்.

நான் வேண்டி விரும்பி இந்த இடத்திற்கு வரவில்லை.நிர்வாகம் தான் என்னை இந்த பதவிக்கு மாற்றினார்கள்.எனக்கு போஸ்டிங் கேட்டு வேலை செய்வதே எனக்கு பிடிக்காது.

நான் தற்போதும் இந்த பதவியில் விருப்பம் இல்லாமல் தான் பணியாற்றுகிறேன்.

திருத்தணியில் பணியாற்றிய போது லஞ்ச ஒழிப்புத் துறையில் நிலுவையிலுள்ள புகாரால் நான் பதவி உயர்வு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளேன்.அங்கு நான் பணம் கேட்டதாக என் மீது வழக்கு இல்லை.என் பெயர் சொல்லி ஒருவர் பணம் கேட்டார் என்று தான் வழக்கு.

நான் அவரை நான் மேற்பார்வை செய்யப்படவில்லை என்பதுதான் புகார். அந்த புகாரை விசாரித்து விட்டார்கள்.அந்த புகாரில் என் மீது எந்த தவறும் இல்லை என்று விசாரணை முடிவுக்கு வந்துள்ளது என்று அவர் கூறினார்.

இதுகுறித்து வருவாய்த் துறை ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் விருப்பமில்லாமல் பணியாற்றும் ஒருவர் கலெக்டரிடம் எனக்கு அந்த பதவியில் விருப்பமில்லை என்று சொல்லிவிட்டு அவருக்கு எந்த துறை பிடிக்குமோ அந்தப் துறைக்கு பணிமாறுதல் வாங்கிவிட்டு போக வேண்டியது தானே! என்கிறார்கள். லஞ்சம் வாங்கினாரா இல்லையா என்கிற கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு விஷயங்களை அவர் பேசுகிறார்.

லஞ்சம் வாங்கியவர்கள் யார் நான் இந்த பதவிகளுக்கு “பணம்” பெற்றுக் கொண்டுதான் போஸ்டிங் போட்டேன் என்று ஒத்துக்கொள்வார்கள் என்கின்றனர். போட்டு கொடுப்பதில் கணேசனை மிஞ்ச ஆளே கலெக்டர் ஆபீசில் இல்லை என்கிறார்கள்.

இந்த போஸ்டிங் விவகாரம் குறித்து கலெக்டர் தான் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போது தான் தாசில்தார், துணை தாசில்தார்கள், ஆர்.ஐ. போஸ்டிங் போட்டதில் ஊழல் நடந்துள்ளதா இல்லையா என்பது தெரியவரும்.

இதையும் படிங்க.!