ஆவடி பாதுகாப்பு துறை அலுவலகம் அருகே இரட்டை கொலை.

March 13, 2022

By இரா. தேவேந்திரன்.

ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒ.சி.எப் மைதானத்தில் சுமார் நள்ளிரவு 12:00 மணியளவில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில்ஆவடி அடுத்த கௌரிபேட்டை மசூதி தெருவை சேர்ந்த, மீன் வியாபாரி அசார் வ/27 ஆவடி வசந்தம் நகர்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுந்தர் வ/29 ஆகிய இருவரையும் மரம்மான முறையில் இருவரை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மர்ம நபர்கள் ஆவடி காவல் உதவி ஆணையாளர் அலுவலகம் அருகே நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்

கொலை செய்யப்பட்டவர்கள்.

.

அசாருதீன் மற்றும் சுந்தர் இருவரும் முகத்தில் வெட்டுப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக இறந்தவரின் தந்தை அக்பர் பாஷா என்பவருக்கு தகவல் தெரிந்து ஆவடி காவல் நிலையத்திற்கு அளித்த தொலைபேசி தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேறு ஏதேனும் இடத்தில் கொலை செய்துவிட்டு உடலை இங்கு கொண்டு வந்துமர்ம நபர்கள் யாரேனும் இங்கு வீசிவிட்டு சென்றார்களா?இல்லை ஒ.சி.எப் மைதானத்தில் தான் இந்த கொலை சம்பவம் நடந்ததா என இரண்டு கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் நடந்த இந்த இரட்டை கொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஆவடி பகுதியை சேர்ந்த ஜெகன், யாசின் என இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Share:

இரா. தேவேந்திரன்.

March 13, 2022

Leave a Comment