chennireporters.com

சேதமடைந்த சுரங்க பாதையை சரி செய்த எம்.எல்.ஏ.

திருத்தணியில் சேதமடைந்திருந்த சுரங்க நடை பாதையை பொது மக்கள் கோரிக்கை வைத்தவுடன் திருத்தணி எம்.எல்.ஏ சந்திரன் உடனடியாக சரிசெய்து கொடுத்தார்.

திருத்தணி பஸ் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனை அரசு மகளிர் மேநிலைப்பள்ளி மற்றும் கீழாந்தூர், புதூர் செல்வதற்கு மேட்டுத்தெரு வழியாகத்தான் போகவேண்டும்.அந்த வழியில் ரயில் பாதை இருக்கிறது.

நிறைய ரயில்கள் வருவதால் ரயில்வே கேட் திறந்திருக்கும் நேரத்தை விட மூடியிருக்கும் நேரமே அதிகமாக இருக்கிறது.இதனால் மோட்டார் பைக் காரில் செல்பவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அதனால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப் படுகிறார்கள்.

சுரங்கப்பாதை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு சிறிய அளவில் உதவியாக இருப்பது சதாசிவம் கோயில் எதிரேயுள்ள சிறிய அளவிலான ரயில்வே சுரங்கப்பாதை இருக்கிறது.

அது பெரும்பாலும் சாக்கடை கழிவுநீர் நிரம்பி அருவெறுப்பான சூழ்நிலையில் கவனிப்பாரின்றி இருந்து வருகிறது.இதை சீர் செய்வதென்றால் ரயில்வே நிர்வாகம் தான் செய்ய வேண்டும்.பலமுறை முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் நிர்வாகம் எடுக்கவில்லை.

நேற்று அந்த பகுதி மக்கள்திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் அவர்களை சந்தித்து முறையிட்டார்கள்.உடனடியாக அந்த கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்தி பொதுமக்கள் சென்று வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தி.மு.க எம்.எல்.ஏ சந்திரன்

அதனைத் தொடர்ந்து சாக்கடை சரி செய்யும் பணி தொடங்கப்பட்டது.அத்துடன் ரயில்வே நிர்வாகத்துடன் பேசி இதற்கு நிரந்தரத் தீர்வு காண்பதாகவும் உறுதி கூறியுள்ளார்.முதல்வரின் எண்ணத்திற்கு ஏற்ப தொகுதியை மேம்படுத்த உழைக்கும் திருத்தணி தி.மு.க. எம்.எல்.ஏ. வுக்கு திருத்தணி பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க.!