chennireporters.com

#drunk sub-inspector threatened;குடிபோதையில் காவலரை மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர்.

நகரி மண்டலத்தில் என் சாவுக்கு காரணம் சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் பாபு தான் என்று எழுதி வைத்து விட்டு காணாமல் போன காவலரின் ஹரியின் குடும்பம் வேதனையில் ஆழ்ந்துள்ளது என்று சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வைரலாகி வருகிறது.

சித்தூர் மாவட்டம் நகரி மண்டலத்தில் அமைந்துள்ளது. ஆர் 3 விஜயபுரம் காவல் நிலையம். இந்த காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக மகேஷ்பாபு என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் எப்போதும் அதாவது பணி நேரத்தில் குடிபோதையில் இருப்பதாக கூறப்படுகிறது.

Nearby Police Station in Nagari, Chittoor - Police Helpline Number -  Justdial

விஜயபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கனகம்மாசத்திரம், பன்னூர் போன்ற பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் இயங்கி வருகிறது.

தமிழகத்தில் அரசு விடுமுறை நாட்களில் மது கடைகள் மூடப்பட்டிருந்தாலும் ஆந்திரா எல்லையான விஜயபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கனகம்மாசத்திரம் பண்ணூர் போன்ற பகுதிகளில் எப்போதும் மதுக்கடைகள் இயங்கி வரும்.

இந்த காவல் நிலையத்திற்கு பதவிக்கு வரும் சப் இன்ஸ்பெக்டர்கள் , சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள் அனைவரும் மதுக்கடை முதலாளிகளிடம் மாத, மாதம் லஞ்சம் வாங்குவதும், உயர் ரக மதுபானங்களை ஓசியில் வாங்கி குடிப்பதும் ஒரு வேலையாகவே செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் பாபு அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் ஹரி என்ற காவலரை ஆபாச வார்த்தைகளால் குடிபோதையில் திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதில் மன உளைச்சல் அடைந்த ஹரி அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே உயரதிகாரிகளிடம் விடுமுறை வாங்கிய பிறகும் நீ வேலைக்கு வந்தே ஆக வேண்டும் என்று மகேஷ் பாபு குடிபோதையில் காவலர் ஹரியை மிரட்டியதாக தெரிகிறது.

 

Chandrababu Naidu To Take Oath As Andhra Chief Minister On June 12, PM Modi  To Attend

முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

இதனால் வேதனை அடைந்த காவலர் ஹரி எல்லா உயரதிகாரிகளுக்கும் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்னை சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் பாபு மிரட்டி வருகிறார். உயர் அதிகாரிகள் விடுமுறை அளித்தும் கூட அந்த உத்தரவை செயல்படுத்தாமல் நீ உடனே வேலைக்கு வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார் என்று சொல்லிவிட்டு தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார்.

ஏறக்குறைய இரண்டு நாட்கள் ஆகியும் காவலர் ஹரி தனது குடும்பத்தினருடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் வீட்டிற்கும் போகாமல் எங்கு சென்றார் என்று தெரியவில்லை காவலர் ஹரியின் குடும்பமும் நகரி மண்டல போலீஸ் அதிகாரிகளும் காவலர் ஹரியை தேடி வருகின்றனர்.

மகேஷ்பாபு பெரும்பாலும் பணி நேரங்களில் குடிபோதையில் இருப்பதாகவே அந்த பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

தமிழ்நாட்டைப் போல அல்லாமல் ஆந்திராவில் சப் இன்ஸ்பெக்டர், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் என்றாலே பொதுமக்களுக்கு பயம் அரசியல்வாதிகளை மட்டும்தான் ஆந்திராவில் போலீஸ் அதிகாரிகள் மதிப்பார்கள் சாதாரண பொது மக்களை மிரட்டுவது மட்டுமல்லாமல் அடித்து துவம்சம் செய்து விடுவார்கள் எனவே ஆந்திராவில் காவலர்களின் கையே ஓங்கி நிற்கும்.How Did YS Rajasekhara Reddy Become God To Roja?

நகரி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ  திருமதி ரோஜா செல்வமணி.

இதுகுறித்து ஒய் எஸ் ஆர் காங்கிரஸின் முன்னாள் அமைச்சரும் நகரி தொகுதியின் எம்எல்ஏவும் ஆன திருமதி ரோஜா செல்வமணி அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எங்களது தலைவர் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் வைத்திருந்தார். ஆனால் சந்திரபாபு நாயுடு அவருடைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது ஒரு காவல் நிலையத்தில் ஒரு காவலருக்கு சுதந்திரம் இல்லாமல் ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது உயரதிகாரிகள் விடுமுறை அளித்தும் கூட சப்-இன்ஸ்பெக்டர் அவரை மிரட்டி தற்கொலை செய்து கொள்ளும் நிலையை ஏற்படுத்தி உள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது சட்டம் ஒழுங்கை சீர்குலைய காரணமாக இருக்கும் சந்திரபாபு நாயுடு அவர்களின் கையில் வைத்திருக்கும் காவல்துறை ஒழுங்காக செயல்படவில்லை இயங்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

Andhra polls: Why Roja's detractors call her 'Chandramukhi of Nagari'

ஒய் எஸ் ஆர் காங்கிரஸின் முன்னாள் அமைச்சரும், நகரி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ திருமதி ரோஜா செல்வமணி.

தற்போது வரை காவலர் ஹரியின் நிலைமை என்னவென்று இதுவரை தெரியவில்லை. அவரது குடும்பத்தினரும் ஹரியை பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர். அவர் என்ன ஆனார் என்ற தகவலும் இதுவரை காவல் துறையினர் வெளியிடவில்லை. இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன் என்று முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் திருமதி ரோஜா செல்வமணி அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருமதி ரோஜா அவர்களின் இந்த கண்டனம் சித்தூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க.!