chennireporters.com

குஜராத்தில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள கொரோனா போலி தடுப்பூசிகள் தயாரித்த ஏழுபேர் கைது.

upilicate corona medicine
போலி தடுப்பூசிகளும் கைப்பற்ற 90லட்சம் பணமும்.

குஜராத்தில் மாநிலத்தில் போலி கொரோணா தடுப்பூசிகள் தயாரித்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 90 லட்ச ரூபாய் பணம் மற்றும் 60 ஆயிரம் போலி மருந்து பாட்டில்கள் மற்றும் 30 ஆயிரம் போலி ஸ்டிக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

poli 2
போலி கொரோணா தடுப்பூசிகள் தயாரித்த தொழிற்சாலை.

குஜராத் மாநிலத்தில் மோர்பி காவல் நிலைய போலீசார் அகமதாபாத், மோர்பி மற்றும் சூரத் போன்ற பகுதிகளில் போலி தடுப்பூசிகள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து போலீசார் மூன்று இடங்களில் சோதனை நடத்தினர்.அந்த இடத்தில் போலியாக தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

poli 2
சீல் வைக்கப்பட்ட போலி மருந்துகள்.

அங்கு பணியாற்றிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தியா முழுவதும் இந்த போலி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது .இந்த செய்தியை ஆங்கிலம் மற்றும் தமிழ்     செய்தித்தாள்கள் சிறிய அளவில் இடம் பெற்றுள்ளது.

poli 4
போலி மருந்து தயாரித்து கைதுசெய்யப்பட்ட ஏழு பேர்.

இதையும் படிங்க.!