ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்க வேண்டும் என்று பல புகார் கடிதங்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து குளத்துக்குள்ளே நடவயல் என்று ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டியதால் அதிகாரிகள் அதிரடியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா துவார் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பாப்பான்குளம் மற்றும் பறையன் குளம் என இரண்டு குளங்களும் தனி நபர்களால் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு குளத்தின் தடயமே இல்லாமல் சாகுபடி செய்து வந்தார்கள்.இந்த ஆக்கிரமிப்பு எதிர்த்து அந்த பகுதி மக்கள் தனித்தனியாக வருவாய்த் துறையிடம் புகார் மனு அளித்து வந்த நிலையில் எந்த பயனும் அளிக்கவில்லை. பிறகு நீர்நிலைகள் மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டும் என்று தொடர்பாக போராடிவரும் எழுத்தாளர் துரை குணா அவர்களின் உதவியோடு 2019 ஆண்டு அன்றைக்கு புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக இருந்த பாலதண்டாயுதபாணியிடம் இந்த புகார் மனுவை அளிக்கப்பட்டது.பிறகு வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பேரில் மறுநாள் குளத்தை அளவீடு செய்து அறிக்கை தருமாறு கேட்டுக் கேட்டுக்கொண்டார். கீழே உள்ள அதிகாரிகள் அளவீடு செய்த பிறகு அதை அப்படியே போட்டுவிட்டு அடுத்த வேலைக்கு சென்று விட்டார்கள்.தற்பொழுது வருவாய் கோட்டாட்சியராக இருக்கும் ஐஸ்வர்யாவை அவர்களை துரை குணா அவர்கள் 17-05-2024 தேதியன்று சந்தித்து ஏற்கனவே நடந்த நடப்புகளை குறிப்பிட்டும், நினைவூட்டியும் புகார் கொடுத்துள்ளார். அதை வாங்கிய கோட்டாட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியும் கொடுத்துள்ளார். ஆனால் நடவடிக்கைக்கான எந்தவித முகாந்திரமும் இல்லாததால் இந்த நிலை குறித்து நோட்டீஸ் ஒட்டுவதற்கு 1-7-2024 தேதியில் மாவட்ட எஸ்பி ஆலங்குடி டிஎஸ்பி கரம்பக்குடி காவல் ஆய்வாளர் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அனைவருக்கும் பதிவு அஞ்சலில் அனுமதிக்கான கடிதத்தை அனுப்பி உள்ளார்.அதிகாரிகள் இதை மிக பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. பிறகு 24-07-2024 தேதியன்று கரம்பக்குடி காவல் ஆய்வாளரை நேரில் சந்தித்து 29-07-2024 தேதியன்று நோட்டீஸ் ஓட்டதற்கு கடிதம் கொடுத்துள்ளார். கடிதத்தை வாங்கிய ஆய்வாளர் நீங்கள் கொடுத்த அத்தனை அனுமதி கடிதத்தையும் நான் கந்தர்வகோட்டை வட்டாட்சியருக்கு அனுப்பி விட்டேன் இதுகுறித்து வட்டாட்சியர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்.துரை குணா அறிவித்தது போல் நடு குளத்துக்குள்ளே நடவுவாயல் என்றொரு சினிமா போஸ்டரை போல் அடித்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஒட்டி புதுக்கோட்டை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டையே பரபரப்பாகிவிட்டார். இவ்வளவு செய்திகள் ஊடகங்களில் வாயிலாக வந்த பிறகு அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் வேறு வழியின்றி நேற்று முன்தினம் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் விஜயலட்சுமி தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் காவல் துறை முன்னிலையில் அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள் .
இது குறித்து துரை குணா கூறும் பொழுது அதிகாரிகள் பெரும்பாலும் பொதுமக்கள் நலம் சார்ந்து எதையும் செய்வதில்லை. ஆளு கட்சிக்காரர்கள் செய்யும் சட்டவிரோதமான செயல்களுக்கு அனுமதி கொடுப்பதும், அரசு இடங்களை பட்டா போட்டு கொடுப்பதும், கனிம வளங்களை முறைகேடாக வெட்டி செல்வதற்கு மறைமுக உதவி செய்வதும் தான் இவர்களின் முழு நேர வேலையாக உள்ளது.எங்களை போன்றோர் கொடுக்கும் புகார் மணி மீது மிகவும் எரிச்சலாகவும் கோபமாகவும் பார்க்கிறார்கள் இவனுக்கு வேறு வேலை இல்லை.கடிந்து கொள்கிறார்கள் ஏனென்றால் நாங்க செய்ய சொல்லும் வேலைகளில் அவர்களுக்கு லாபம் எதுவும் இல்லை என்பதுதான். அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலைகளை எங்களை அர்ப்பணித்துக் கொண்டு நாங்கள் செய்கிறோம் இது மக்களுக்கு தான் வெளிச்சம் என்றனர்.