மின்தடை புகார் எண்; உங்கள் வீட்டில் மின்சார தடைகள் ஏற்படும் பட்சத்தில் பின்வரும் விஷயங்களை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.
1. உங்கள் ஏரியாவிற்கான இபி அலுவலக எண் கூகுளில் கிடைக்கும். இந்த நம்பருக்கு போன் செய்யலாம்.
2. மின்னகத்தின் இலவச நம்பருக்கு போன் செய்யலாம்.
3. 9498794987 என்பதுதான் இலவச மின்னக நம்பர் ஆகும். இதற்கு நீங்கள் போன் செய்து சில நிமிடங்கள் காத்திருந்தால் புகார் அளிக்கலாம்.
4. புகார் அளிக்கும் போது உங்களின் பகுதி, தெரு மற்றும் மின்சார இணைப்பு எண் ஆகியவை மிக முக்கியம்.
5.இல்லையென்றால் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கமான https://twitter.com/TANGEDCO_Offcl பக்கத்தில் நீங்கள் உங்கள் புகார்களை கொடுக்கலாம்.
தங்கம் தென்னரசு, எரிசக்தி துறை அமைச்சர்
புதிய புகார் முறை: இதோடு இல்லாமல் இனி தமிழ்நாட்டில் மின்சாரம் தொடர்பான புகார்களை இனி வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மழை காலத்தை முன்னிட்டு முதல் கட்டமாக இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, அந்த வகையில் சென்னை வடக்கு பகுதியில் வசிப்பவர்கள் 94440 99255 வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம், மத்திய சென்னை பகுதியில் வசிப்பவர்கள் 94458 50739 வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம், சென்னை மேற்கு பகுதியில் வசிப்பவர்கள் 94983 78194 வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம்,
சென்னை தெற்கு பகுதியில் வசிப்பவர்கள் 91500 56672 வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம், சென்னை தெற்கு பகுதியில் வசிப்பவர்கள் -91500 56673 வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம், செங்கல்பட்டு பகுதியில் வசிப்பவர்கள் 91500 56675 வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம், காஞ்சிபுரம் பகுதியில் வசிப்பவர்கள் 91500 56674 ஆகிய வாட்ஸ் அப் எண்களிலும் புகார்களை தெரிவிக்கலாம்.