#TN assembly election 2026# ;
அதிமுக கூட்டணியில்; பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, அமமுக போன்ற முக்கிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ஏற்கனவே பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 இடங்களும், டிடிவி தினகரனுக்கு 11 இடங்களும் தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் பாஜகவிற்கு ஆவடி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவடியில் முதல்முறையாக பாஜக களம் காண்கிறது. ஆனால் பாஜக வெற்றி பெற வாய்ப்பு இல்லை.
வெற்றி பெறக்கூடிய வாய்ப்பிருக்கும் தீநகர் தொகுதியை ஒதுக்கித் தர வேண்டும் என்று பாஜகவினர் தங்களது கட்சி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.![]()
அதேபோல அண்ணாமலை தேர்தல் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பது குறித்து தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் நைனா நாகேந்திரன் தெரிவித்துவிட்டார். இந்த நிலையில் பாஜக தங்களை பெறும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளதை மனதில் வைத்துக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் சில இடங்களை மட்டும் கொடுத்துவிட்டு தோற்கக்கூடிய பல தொகுதிகளை அவர்களுக்கு வழங்கி விட்டார்கள் என குற்றம் சாட்டி வருகின்றனர் பாஜகவினர்.
அதேபோல தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து இரண்டு முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகிவிட்டனர் அவர்கள் கேட்ட தொகுதிகள் வழங்கவில்லை என்று அவர்கள் கட்சியை விட்டு வெளியேறி விட்டனர் ஆனால் அதில் போட்டியிடும் ஐந்து பேரும் தாமரை சின்னத்தில் தான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி விட்டது. அதன் அடிப்படையில் ஈரோடு தொகுதி மட்டும் வெற்றி பெறக் கூடிய வாய்ப்பு இருந்தாலும் மற்ற தொகுதிகளை தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல நீண்ட காலமாக அதிமுகவிற்கு பூஜா தூக்கி வந்த புரட்சி பாரதம் கட்சித் தலைவர் இந்த முறை அரக்கோணம் தொகுதி தங்களுக்கு வேண்டுமென்று கேட்டார் ஆனால் அங்கு ஏற்கனவே இரண்டு முறை வெற்றி பெற்ற சு ரவிக்கு மீண்டும் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அதனால் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்திக்கு தற்போது எந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாரோ அதே தொகுதி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது ஆனால் அவரும் தாமரை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று பாஜக தலைமை வலியுறுத்தியுள்ளது. 
அதிமுக கூட்டணியில் நீண்ட காலம் நீடித்து வந்த புதிய தமிழகம் கட்சி தங்களுக்கு கேட்ட தொகுதிகள் வழங்கவில்லை என்று அவர்கள் தனியாக தனித்துப் போட்டியிடுகின்றனர்.
ஐஜேகே கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அந்த இரண்டு தொகுதிகளிலும் தாமரை சின்னத்திலே அவர்கள் போட்டியிடுகிறார்கள் அவர்களும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள பல தொகுதிகளில் அந்த கட்சியினர் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இப்படி தனித்து நாம் தனி மெஜாரிட்டியுடன் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி புத்திசாலித்தனமாக கூட்டணி கட்சிகளுக்கு வெற்றி பெற முடியாத இடங்களை ஒதுக்கி விட்டார் என்று அந்த கட்சியில் உள்ள கூட்டணி கட்சித் தலைவர்களே வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
தங்கள் கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் உன்னால் எம்எல்ஏவும் மாவட்ட செயலாளருமான அம்பத்தூர அலெக்ஸ்சாண்டர் அதுபோல பல முக்கிய நிர்வாகிகளுக்கு சீட்டு வழங்காமல் விட்டுவிட்டார். அவர்கள் வேறு ஏதாவது கட்சிக்கு போகலாமா என தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே இந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 இல் எடப்பாடி பழனிச்சாமி மிக சாதுரியமாக காய் நகர்த்தி தனது அரசியலை செய்து வருகிறார் என்கிறார்கள் முக்கிய அரசியல் விமர்சகர்கள்.
