chennireporters.com

உயிருக்கு போராடும் தனியார் நிறுவன ஊழியர்கள்; தொடரும் பெண்கள் போராட்டம்.

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார் சத்திரம் அருகே உள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வருகிறார்கள்.

அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான ஹாஸ்டலில் தரமான உணவு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் இரண்டு தினங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட உணவு விஷமாக மாறி 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டனர்.

அவர்கள் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் சில பெண்கள் இறந்துவிட்டதாக பெண் ஊழியர்கள் மத்தியில் தகவல் பரவியது.

அதனைத்தொடர்ந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 8 மணி நேரமாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டம் இரு பக்கத்திலும் வாகனங்கள் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கும் நிறுத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அரசு அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டு வரும் பெண்களிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.இதில் எந்த சமரசமும் ஏற்படவில்லை.

அதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்போது வதந்திகளை நம்ப வேண்டாம் பெண்கள் நலமுடன் இருக்கிறார்கள்.

அவர்களுடன் நான் வீடியோ காலில் பேசினேன் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

நீங்கள் போராட்டத்தை நடத்த வேண்டாம் போராட்டத்தை கைவிடுங்கள் அவர்கள் அனைவரும் நலமாக இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.தற்போது வாகனங்கள் போகத் தொடங்கி விட்டன.

இந்த நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தனியார் நிறுவனங்களில் உணவு சாப்பிட்டு ஃபுட் பாய்சன் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊழியர்களின் விபரங்களையும் நலமுடன் இருக்கிறார் என்பதையும் மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் போராட்டத்தை தூண்டி விடுவதாக வளர்மதி என்கிற பெண்ணை கிண்டி காவல் நிலையத்தில் கைது செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த போராட்டம் குறித்து தனியார் நிறுவனங்களில் தங்கி வேலை செய்யும் பெண்களுக்கு தரமான உணவையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க.!