chennireporters.com

#ex-minister complained to dgp; புதுச்சேரி கள்ளக்காதல் விவகாரம் இன்ஸ்பெக்டரை மாற்றச் சொல்லி டிஜிபிக்கு புகார் கொடுத்த முன்னாள் அமைச்சர்.

பாண்டிச்சேரி ஏனாம் பகுதியில் கள்ளக்காதலில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டரை மாற்றச் சொல்லி டிஜிபிக்கு முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணமூர்த்தி  கொடுத்த புகார் தற்போது பாண்டிச்சேரி காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.ஏனாம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சண்முகம்.

புதுச்சேரி ஏனாம் பகுதியில் கள்ள லாட்டரி, கஞ்சா, போதைப் பொருள்கள் மதுபானங்கள் கடத்தல் என பல்வேறு சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது . ஆனால் மாமுல் காரணமாக எந்த வித சட்டவிரோத செயல்களையும் போலீசார் கண்டு கொள்வதே இல்லை என்று கூறப்படுகிறது. காரணம் வழக்கமான மாமூல் தான் என்கின்றனர் அந்த பகுதி மக்கள். இந்நிலையில் கடந்த வாரம் சட்டம் ஒழுங்கு டிஐஜி ஏனாம் காவல் நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆனாலும் ஏனாம் போலீசார் மத்தியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பான செயல்கள் தினமும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது என்கின்றனர் உளவுத்துறை போலிசார்.  இந்த நிலையில் ஏனாம் பகுதி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சண்முகத்தின் செயல்பாடுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு;

ஏனாம் பகுதியைச் சேர்ந்த ஒரு அழகிய பெண் காவலர் உடன் இன்ஸ்பெக்டர் சண்முகம் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் தற்போது இந்த பெண் காவலர் புதுச்சேரி ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் ஏனாத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக புதுச்சேரியில் இருந்து ஆயுதப்படைக்கு போலீசார் ஏனாம் பகுதிக்கு அனுப்பப்பட்டனர். இதில் இந்த பெண் காவலரும் ஏனாம் பகுதிக்கு சென்றார். அப்போது இன்ஸ்பெக்டருடன் அந்த பெண் காவலருடன் மிகவும் நெருங்கி பழகினாராம். இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதில் காதல் வயப்பட்ட இன்ஸ்பெக்டர் சண்முகம் தனது கள்ளகாதலி காக்கியுடன் ஊர் சுற்ற ஆரம்பித்துவிட்டாராம்.

இதையடுத்து இரண்டு பேரும் பல இடங்களில் இரவு நேரங்களில் உல்லாசமாக சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. அரசு நிகழ்ச்சி முடிந்து அனைத்து ஆயுதப்படை காவலர்களும் புதுச்சேரிக்கு திரும்பி விட்டனர். ஆனாலஅந்த பெண் காவலர் மட்டும் மெடிக்கல் லீவ் போட்டுவிட்டு ஏனாம் பகுதியில் ஒரு சொகுசு விடுதியில் தங்கி ஜாலிலோ ஜிம்கான செய்து வருகிறார்களாம். இதனால் தன்னுடைய வேலையை சரிவர கவனிக்காத இன்ஸ்பெக்டர் சண்முகம் பெண் காவலர் உடன் நேரத்தை  ஜாலியாக கழித்து வந்தாரம்.

 

இன்ஸ்பெக்டர் சண்முகம்.

தனது காவல் நிலையத்தில் உள்ள முக்கிய வழக்குகளை விசாரிக்காமல் இந்த அழகிய பெண் காவலருடன் சொகுசு காரில் சில்ன்னு ஊர் சுற்றி வந்தாராம். இன்ஸ்பெக்டர் சண்முகத்தின் இந்த செயல் மற்ற காவலர்களை முகம் சுளிக்க வைத்ததாக கூறப்படுகிறது. பெண் காவலருடன் நெருக்கமாக இருந்த இன்ஸ்பெக்டர் சண்முகம் தன்னுடைய வேலையை சரியாக செய்யாததை  எஸ்.பி ராஜசேகர் கண்டித்துள்ளார். இது மட்டும் இன்றி இன்ஸ்பெக்டர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ்.

இதனால் ஏனத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்  இன்ஸ்பெக்டரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி ஷாலினி சிங்கிடம்  புகார் அளித்ததாக கூறப்படுகிறது.  இந்த செய்தி தான் தற்போது பாண்டிச்சேரி காவல்துறையினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

டிஜிபி ஷாலினி சிங்.

சட்டம் ஒழுகை பாதுகாக்க வேண்டிய கடமை மிக்க காவல்துறை அதிகாரிகள் இதுபோன்ற கள்ளக்காதலில் ஈடுபட்டு கண்ணியமிக்க காக்கி சட்டையின் புனிதம் காற்றில் பறப்பதை டிஜிபி ஷாலினி சிங் சரி செய்வாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இன்ஸ்பெக்டர் சண்முகத்தின் காக்கி சட்டை கழற்றப்படுமா அல்லது கள்ளக்காதல் தடுக்கப்படுமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

இதையும் படிங்க.!