chennireporters.com

இணையத்தில் வைரலாகும் முதலமைச்சர் ஸ்டாலின் உடற்பயிற்சி வீடியோக்கள்.

தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

68 வயதாகும் ஸ்டாலின் அடிக்கடி சென்னையில் இருந்து மகாபலிபுரம் வரை சைக்கிள் பயிற்சி மேற்கொள்வதும் மேலும் தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வதும் நடை பெற்றுவருகிறது.

தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக தினமும் அவர் உடற்பயிற்சி செய்வதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன பல்வேறு வேலைகளுக்கு இடையே அவர் தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்து வருகிறார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் மகனாக இருந்த போதும் தன்னுடைய உழைப்பால் கட்சியின் ஒவ்வொரு பொறுப்பிலும் அங்கம் வகித்து வந்தார்.அவர் வகித்த பதவிகளில் சிறப்பாக பணியாற்றி இளைஞரணி செயலாளராக பதவி உயர்வு பெற்றார்.

முதன்முதலில் சென்னை மேயராகவும், அதன்பிறகு சட்டமன்ற உறுப்பினராகவும் உயர்ந்தவர் அதன்பிறகு முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் பின்னர் துணை முதலமைச்சராகவும் பதவி வகித்து வந்தார்.

அதன் பிறகு தனது தந்தையுடன் அரசியல் பயணத்தில் பங்கெடுத்த ஸ்டாலின் மெல்லமெல்ல அரசியல் நுணுக்கங்களையும் அரசியல் பாடங்களையும் கற்றுக் கொண்டவர்.

தனது தந்தையின் சாதுரியத்தை மூல மந்திரமாக வைத்துக்கொண்டு தற்போது அரசியலில் சேவை செய்து தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கிறார்.

அவர் நல்ல உடல்நலத்துடனும் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களும் கட்சித் தொண்டர்களும் விரும்புகின்றனர்.

அதே போல தமிழக மக்களுக்காக அவர் சிறப்புடன் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தமிழக மக்களின் வாழ்வு வளமாக வேண்டுமென்ற எண்ணத்தின் அடிப்படையில் தன் உடலையும் தமிழக மக்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அவர் உடற்பயிற்சி செய்து விடுகிறார்.

அதனடிப்படையில் தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள உணவு கட்டுப்பாடுகளையும் தினமும் உடற் பயிற்சிகளையும் செய்து வருகிறார். திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின்.

இதையும் படிங்க.!