வடசென்னையில் பெரும்பாலான நபர்கள் தங்களது வாகனத் தில் பிரஸ் என்ற ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு செல்வதையும், அவர்களை மடக்கி போலீசார் அடையாள அட்டையை சோதனை செய்தால் குறிப்பிட்ட மாத பத்திரிகையில் வேலை செய்வதாகவும் கூறி வந்தனர். இதுகுறித்து நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் ரகசியமாக வட சென்னையில் செயல்பட்டு வரும் பத்திரிகையாளர் சங்கங்கள் மற்றும் மாத பத்திரிகைகளை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் வில்லிவாக்கத்தில் குறிப்பிட்டஒரு பத்திரிகையாளர் சங்கத்தில் எந்த சான்றிதழ் கேட்டாலும் அதனை தயார் செய்து கொடுப்பதாகவும், மேலும் ஒவ்வொரு சான்றிதழுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயத்து வசூல் செய்வதாகவும் ராஜமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
குறிப்பிட்ட அந்த அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் சிலர் அமர்ந்து கொண்டு கட்டப் பஞ்சாயத்து செய்வதாகவும் தகவல் கிடைத்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் 13வது நீதிமன்ற நடுவர் தர்மபிரபுவுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்து உரிய அனுமதி பெற்று நேற்று முன்தினம் மாலை வில்லிவாக்கம் பாலாம்பிகை நகர் பகுதியில் உள்ள யுனிவர் செல் பத்திரிகை ஊடக சங்கம் என்ற அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த அலுவலகத்தில் இருந்து பள்ளி கல்லூரிகள் வழங்கும் பல்கலைகழக சான்றிதழ்கள் போலியாக அச்சடித்து கொடுத்ததற்கான ஆவணங்கள் இருந்தன. அதே போல ஆந்திராவில் உள்ள சில கல்லூரி பெயரில் எல்.எல்.பி படிப்பிற்கான ஆவணங்கள் என பல்வேறு போலி ஆவணங்கள் அச்சடிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, அந்த கட்டிடத்தில் இருந்து லேப்டாப், 2 செல்போன்கள், பென்டிரைவ், டி.வி.ஆர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குறிப்பிட்ட அந்த யூனிவர்சல் பத்திரிகை ஊடக சங்கத்தை நடத்தி வந்த விநாயகபுரம் பத்மாவதி நகரை சேர்ந்த விஜய் ஆனந்த் மற்றும் அந்த பத்திரிகை அலுவலகத்திற்கு பொருளாலராக செயல்பட்ட ஆவடி மெஜஸ்டிக் நகரை சேர்ந்த ரூபன் ஜெர்மையா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் இவர்கள் போலி ஆவணங்கள் தயாரித்து பலருக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் எங்கு காலி பணியிடங்கள் உள்ளனவோ அதனை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிந்துகொண்டு குறிப்பிட்ட அந்த வேலைகளுக்கு வேலை வாங்கி தருவதாக போலியாவணங்களை தயாரித்து அதனை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும் 10 மற்றும் 12 வகுப்பு சான்றிதழ் ஆந்திராவில் எல்எல்பி படிப்பு முடித்தது போன்ற பல சான்றிதழ்களை இவர்கள் சொந்தமாக தயார் செய்து விற்று வந்ததும் பெரிய பல்கலைக்கழகங்களில் முத்திரைகளை பயன்படுத்தி பிஹெச்டி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது .
கைது செய்யப்பட்ட ரூபன் ஜெர்மையா தன்னை வழக்கறிஞர் என கூறியுள்ளார். விசாரணையில் அவர் வழக்கறிஞர் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதைப்போல விஜய் ஆனந்த் என்பவரும் எல் எல் பி படித்து முடித்து விட்டதாக கூறியுள்ளார். ஆனால் அவர் அந்த படிப்பை முறையாக படித்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் குறிப்பிட்ட யூனிவர்சல் பத்திரிக்கை ஊடக சங்க பெயரை வைத்து மாதந்தோறும் வேறொரு பெயரில் மாத பத்திரிக்கை ஒன்று நடத்தி வந்ததாகவும் அதில் ஏராளமானவர்களை பத்திரிகையாளர்கள் புகைப்பட கலைஞர்கள் எனக்கூறி பிரஸ் என்ற அடையாள அட்டையை கொடுத்ததும் தெரியவந்தது. இதற்காக இவர்கள் பத்தாயிரம் வரை பணம் பெற்றதும் தெரிய வந்துள்ளது. மேலும் போலீஸ் சான்றிதழ் கேட்டு வரும் நண்பர்களிடம் பத்தாயிரம் முதல் இலட்சக்கணக்கில் இவர்கள் பணம் வாங்கியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை அடுத்து இவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பூந்தமல்லி, திருவள்ளூர் என திருவள்ளூர் மாவட்டத்தில் குறிப்பாக ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு தவறியவர்கள் ஆந்திராவில் எல்எல்பி படித்துவிட்டு வழக்கறிஞர்களாக பணியாற்றி வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது
அதேபோல திருப்பூர் கோயமுத்தூர் தர்மபுரி ஈரோடு போன்ற பகுதிகளில் தமிழகத்தில் அதிக அளவில் போலி பத்திரிகையாளர்கள் எழுத படிக்க தெரியாதவர்கள் ஃபிராடுகள் பத்திரிகையாளர்கள் சங்கங்கள் என்ற பெயரிலும் அகில உலக பத்திரிகையாளர் சங்கம் என்ற பெயரிலும் பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் உருவாக்கிக் கொண்டு பிச்சை எடுப்பதும் மிரட்டி பணம் வாங்குவதும் டாஸ்மாக் கடைகளில் கையேந்துவதும் வாடிக்கையாக வைத்துள்ளனர் எனவே அரசு அந்த சங்கங்களை முறைப்படுத்த வேண்டும் என்கின்றனர் அரசு அனுமதி பெற்று இயங்கி வரும் பத்திரிகையாளர் அமைப்புகள்.
சம்பவத்தில் தொடர்புடைய விஜய் ஆனந்த் பல ஆண்டுகளாகவே தன்னை ஒரு பத்திரிகையாளர் என்று ஏமாற்றி வந்துள்ளார் இவர் ஒரு போலி பத்திரிகையாளர்.
இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது பலமுறை சிறைக்கு சென்றுள்ளார். எனவே போலீசார் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்கின்றனர் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர் சங்கங்கள்.
அது தவிர இவர் இதுவரை சம்பாதித்த போலியாக சான்றிதழ் அச்சடித்து விற்பனை செய்ததில் சம்பாதித்த பல லட்ச சொத்து க்களை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் அவர் மட்டுமில்லாமல் அவரது குடும்ப உறுப்பினர்களின் உள்ள வங்கி கணக்குகளை முடக்கி அதில் உள்ள பண பரிவர்த்தனைகளையும் அரசு உடனடியாக முடக்க வேண்டும் உடனடியாக அவர் மீது ஒன்று சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
அது தவிர அரசு உடனடியாக பத்திரிகையாளர்கள் சங்கங்களுக்கு வழங்கியுள்ள அனுமதிகளை ரத்து செய்ய வேண்டும் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர் சங்கங்களாக பதிவுத்துறை சட்டப்படி சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை எல்லாம் ஆய்வு செய்து முறைப்படுத்தி உண்மையான பத்திரிகையாளர் சங்கங்களை மட்டும் இயங்க அனுமதிக்க வேண்டும் என்கின்றனர் பத்திரிகையாளர்கள்.