திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விளாங்காடு பாக்கம், சிறுகாவூர் போன்ற பகுதிகளில் அரசு நிலங்கள் முறைகேடாக ஆக்கிரமித்து பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து நீதிமன்றம் பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டும் கூட மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மெத்தன போக்கால் நீதிமன்றத்தின் அவமதிப்பு வழக்கிற்கு ஆளாகியுள்ளது.
இது திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், புழல் ஊராட்சி ஒன்றியம், விளாங்காடுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களான ஏரி, குளம், குட்டை, வாய்க்கால், மேய்க்கால், தரிசு, மயானம், வண்டிப்பாதை, களம் மற்றும் கோவில் நிலங்கள் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்து செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கண்ணம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம் மீரான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
சென்னை ரிப்போட்டர்ஸ்.காம் இணையதளத்தின் சார்பில் அனைவருக்கும் எங்களின் இதயம் கணிந்த நல் வாழ்துக்கள்.
அதில் முறைகேடாக பதிவு செய்ப்பட்ட பத்திர பதிவுகை ரத்து செய்யவேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய சென்னை உயர்நீதி மன்றம் கடந்த 26/02/2024 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பின் விபரம் வருமாறு;
சமூக ஆர்வலர் செல்வம் மீரான்.
சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பில், 8 வார காலத்திற்குள் மனுதாரரின் புகார் மனு மீது நடவடிக்கை எடுத்து அதை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட பதிவாளர் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார். அதில் பெரும்பாலான அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது உண்மை என தெரியவருகிறது என்று மாவட்ட பதிவாளர் அவர்களின் கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விளாங்காடுபாக்கம் மற்றும் சிறுங்காவூர் கிராமத்திற்கு உட்பட்ட அரசுக்கு சொந்தமான நிலங்கள் விதிமுறைக்கு புறம்பாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், இது முற்றிலும் சட்டவிரோதமானது என்பதால், அதனை ரத்து செய்யக்கோரியும், அரசு நிலங்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் அரசு நிலம் எனத் தெரிந்தே பதிவு செய்வதால் நில மோசடி செயல்களுக்கு வழி வகுக்கிறது எனவும், மேலும் அரசு நிலங்களை முறைகேடக பத்திரப்பதிவு செய்யப்பட்ட அனைத்து பத்திர பதிவுகளையும் ரத்து செய்யுமாறு உத்திரவிட்டுள்ளார். மேலும் மேற்கண்ட அரசு புறம்போக்கு நிலங்களில் விதிகளை மீறி பத்திரப்பதிவு செய்த சம்பந்தப்பட்ட செங்குன்றம் சார்பதிவாளர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலக அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர்.
மேலும் இந்த வழக்கு குறித்து விவரங்கள் அடங்கிய அறிக்கையினை கடந்த 18/06/2024 அன்று பதிவுத்துறை தலைவருக்கு மாவட்ட பதிவாளர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுநாள் வரை அரசுக்கு சொந்தமான நிலங்களை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த செங்குன்றம் சார் பதிவாளர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் மீது, பதிவுத்துறை தலைவர் அவர்கள் துறை ரீதியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மேலும் இந்த வழக்கில் குறிப்பிட்டுள்ள பல்வேறு சர்வே எண்களுக்கு பொன்னேரி வட்டாட்சியர் மூலமாக பட்டாவும் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு செல்வம் மீரான் கடந்த 28/06/2024 அன்று பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் புகார் மனு அளித்துள்ளார் . ஆனால் செல்வம் மீரான் மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறி, வழக்கின் சாராம்சம் புரியாமல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக பொன்னேரி வருவாய்த்தத்துறையினர் அமைதி காத்து வருகின்றனர்.
மேலும் பல்வேறு புகார் மனுக்கள் மீது வருவாய் துறை அதிகாரிகள் வருடக்கணக்கில் பல்வேறு புகார் மனுக்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் வருட கணக்கில் நிலுவையில் வைத்துள்ளனர்.



இது குறித்து செல்வம் மீரான் தற்போது சென்னை உயர் நீதி மன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார், அதில் செங்குன்றம் சார்பதிவாளர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் முறைகேடாக அரசு நிலங்களை பத்திரப்பதிவு செய்துள்ளது. அதிகாரப்பூர்வமாக கடிதம் வாயிலாக பெறப்பட்டு, தற்போது வரை தொடர்ந்து அரசு புறம்போக்கு நிலங்களை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இன்றளவும் முறைகேடாக பத்திரப்பதிவு செய்து வருகின்றனர்.
எனவே இந்த வழக்கில் அரசு புறம்போக்கு நிலங்களுக்கு முறைகேடாக பட்டா வழங்கிய பொன்னேரி வட்டாட்சியர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் அதே போல அரசுக்கு சொந்தமான நிலங்களை பத்திரப்பதிவு செய்த பத்திரபதிவு அதிகாரிகள் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்தல் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


நீதிமன்றம் உத்தரவிட்டும் இது வரை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்து வருகிறார்.
