chennireporters.com

#fake fraud journalists; மோசடியில் ஈடுபடும் போலி ஃபிராடு பத்திரிகையாளர்களை அரசு தடுக்க வேண்டும்.

#special story #special story…

திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள ஃபிராடு பத்திரிகையாளர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

தமிழ்நாட்டிலேயே அதிகளவில் போலி பத்திரிகையாளர்கள்  இருக்கும் மாவட்டம் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் தான் இந்த மாவட்டத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட எழுத படிக்கத் தெரியாத ஏன் குறிப்பாக பத்தாம் வகுப்பை கூட தாண்டாத பிராடுகள் 420 கள் அதிக அளவில் தங்களை பத்திரிகையாளர்கள் என்றும் அகில உலக பத்திரிகையாளர் சங்கத் தலைவர்கள் என்றும் லெட்டர் பேடு வைத்துக்கொண்டு ஊர் முழுக்க பிச்சை எடுப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் ஒரு சிலர் நக்கீரன், ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போட்டர் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றுவதாக அந்த பத்திரிகைகளின் பெயரில் அவர்களாகவே ஒரு போலியாக அடையாள அட்டையை போட்டுக்கொண்டு உயர் போலிஸ் அதிகாரிகளையும் ஐஏஎஸ் அதிகாரிகளையும் சந்தித்து சங்கத்திற்கு நிதி கொடுக்க வேண்டும் சங்கம் ஆண்டு விழா நடத்துகிறோம் அந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வரவேண்டும் என்று அழைப்பது பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா என்று பல்வேறு போலியான வாக்குறுதிகளை வைத்து அதிகாரிகளை அழைத்து வந்து அதன் மூலம் அந்த அதிகாரிகள் மட்டத்திலேயே நிதி வசூல் செய்து சொகுசாக வாழ்ந்து வருகின்றனர்.

இன்னும் சிலர் அதாவது சில பிராடுகள் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள டாஸ்மாக் பார்களில் ஓசியில் குவாட்டர் வாங்குவது பணம் கேட்பது ரேஷன் கடைகளில் பணம் வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மத்திய மாநில அரசுகள் அனுமதி இல்லாமல் தாங்களாகவே ஒரு பத்திரிகைக்கு பெயர் வைத்துக் கொண்டு ஒரு பி டி எப் ஐ தயார் செய்துவிட்டு அதை அவர்களாக ஒரு வாட்ஸ் அப்பில் ஒரு குழுவை ஏற்படுத்தி அதில் முக்கிய அதிகாரிகளின் பெயர்களை இணைத்துவிட்டு அந்த குழுவில் இந்த pdf பை பகிர்ந்து அதன் மூலம் பணம் பெறுவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள பிராடு பத்திரிகையாளர்கள் அது தவிர வாய்க்கு வராத ஒரு பெயரை யூடியூபில் வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு செய்தியை வைரல் ஆக்குவதைப் போல இவர்களே ஒரு ஆளை வைத்து பேச சொல்லி அதை இவர்கள் வைத்திருக்கும் செல்போனில் வீடியோ எடுத்து செல்போனில் இவர்கள் ஏற்கனவே வைத்துள்ள whatsapp குழுவில் அதை ஷேர் செய்து அதன் மூலம் கல்லா கட்டி வருகிறார்கள்.

 

இவர்தான் தன்னை நக்கீரன் பத்திரிகையாளர் என்றும் சில இடங்களில் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையாளர் என்றும் சில இடங்களில் ஜூனியர் விகடன் பத்திரிகையாளர் என்றும் சொல்லி கொண்டு வசூல் வேட்டை நடத்தும் ஃபிராடு பேர்வழி.

திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில்  முக்கிய தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் பணியாற்றும் திறமையான பல சீனியர் பத்திரிகையாளர்கள் இருக்கிற இடம் தெரியாமல் நாகரீகமாக பணியாற்றி வருகிறார்கள். ஆனால் எழுதப் படிக்கத் தெரியாத பிராடுகள் 420-கள் சீட்டிங் பேர்வழிகள் கௌரவ பிச்சை எடுத்துக் கொண்டு ஒரு குவாட்டர் போட்டவுடன் மிரட்டி பணம் கேட்பது சம்பந்தப்பட்ட அதிகாரியிடத்தில் சென்று பணம் கேட்டு மிரட்டுவது அந்த இடத்தில் பத்திரிகையாளர்கள் அடித்து விட்டார்கள் என்று பொய்யாக ஒரு விஷயத்தை பூதாகரப்படுத்தி அதன் மூலம் பணம் பெறுவது இப்படித்தான் தினசரி வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள் .

திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள 420 சீட்டிங் பேர்வழிகள் இவர்களை தடுக்கும் வகையில் உயர் போலிஸ் அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரிகள் டிஆர்ஓ ஆர் டி ஓ கேடரில் உள்ள அதிகாரிகள் பிராடுகளை சீட்டிங் பேர்வழிகளை தடுக்க வேண்டும் தங்கள் இடத்திலோ அல்லது தங்கள் அலுவலகத்திலோ உதவி கேட்டு வருபவர்களை எந்த பத்திரிகைகள் பணியாற்றுகிறார்கள் அவர்களின் பத்திரிகைக்கு அரசு அங்கீகாரம் இருக்கிறதா மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியை தொடர்பு கொண்டு இது போன்ற பத்திரிகை இருக்கிறதா தங்களது அலுவலகத்தில் அவர்களுக்கு அந்த மாவட்டத்தில் பணியாற்ற அந்த அலுவலகம் அவர்களுக்கு அனுமதி வழங்கி இருக்கிறதா என்பதை எல்லாம் விசாரித்து பிறகு தான் அவர்களை அங்கீகரிக்க வேண்டும்.

எனவே அதிகாரிகள் கவனத்திற்கு பிராடுகளையும் 420 களையும் சீட்டிங் பேர் வழிகளையும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பிக்கள் சிட்டி கமிஷனர்கள் ஒரு தனி குழுவை ஏற்படுத்தி இவர்களை ஒடுக்க வேண்டும் என்கின்றனர் சென்னையில் உள்ள பத்திரிகை சங்கங்கள்.

ஃபிராடு போலி ரிப்போட்டர்கள்.

தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு பத்திரிகையாளர்களின் அன்பான வேண்டுகோள. கடந்த 6 வருடகாலமாக போலி பத்திரிகையாளர்களின் நடமாட்டம் அதிகமாகிவிட்டது, அதற்கு முக்கிய காரணமாக காவல்துறை அதிகாரிகள் சிலர் காரணமாகிறார்கள், எப்படி எனில் போலியான பத்திரிகையை கொண்டுவந்து தாங்களிடம் கொடுத்து போட்டோவிற்கு போஸ் கொடுத்து “மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது “என பதிவை போட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபகின்றனர்! அப்போ இதற்கு காரணம் தாங்கள்தானே என்பது எங்களின் தார்மீக கருத்து. உண்மையான பத்திரிகையாளர்கள் யாரும் தாங்களிடம் வந்து பத்திரிகையை கொடுத்து போட்டோபோஸ்  கேட்கமாட்டார்கள் என்பது தாங்கள் அறிந்ததே, எனவே வார மாத இதழ்களை கொண்டுவந்து தரும் பத்திரிகையாளர்களுக்கும், பத்திரிகையாளர் சங்கம் என வேசமிடும் நபர்களுக்கும் போட்டோபோஸ் கொடுக்க வேண்டாம் என்று தமிழக காவல்துறை அதிகாரிகளை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்  உண்மையை உரக்கச் சொல்லும் உண்மை பத்திரிகையாளர்.

ஃபிராடு போலி ரிப்போட்டர்கள்.

திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள போலீஸ் அதிகாரிகள் சைபர் கிரைம் பிரிவு போலீசாரை ஃபிராடு பத்திரிகையாளர்களை ஒடுக்க தடுக்க ஒரு குழுவை தனியாக அமைத்து whatsappகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அரசு அனுமதி பெற்று இயங்கும் பத்திரிகையாளர் அமைப்புகள்.

இந்தியாவிலேயே இல்லாத பெரிய கொடுமை என்னவென்றால் அகில உலக இந்தியன் பத்திரிகையாளர்கள் மன்றத்தின் தேசிய தலைவர் டாக்டர் ஏடிபி வினோத்குமார் என்பவர் திருப்பூரில் புதிதாக பதவியேற்ற போலீஸ் கமிஷனர் லட்சுமி சந்தித்து தான் பெரும் ஆகச்சிறந்த பத்திரிகையாளர் என்றும் உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களுக்கு நான் தான் தலைவர் என்றும் மரியாதை நிமித்தமாக சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை வாட்ஸ் அப்பில் பரப்பி வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார் இவர் கூத்துப்பட்டறையில் கூத்து கலைஞராக உள்ளவர் என்று தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர் திருப்பூரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வருகிறார் என்ற புதிய தகவலும் நமது அலுவலகத்திற்கு புகாராக அனுப்பப்பட்டுள்ளது இப்படிப்பட்ட எழுதப் படிக்கத் தெரியாத பிராடு நாயுடுவின் ஒரு உயர் போலிஸ் அதிகாரி புகைப்படம் எடுத்துக் கொண்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய வருகிறது. இந்த புகைப்படம் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் பேசு பொருளாக எழுந்துள்ளது.

இதையும் படிங்க.!