மதுரவாயல் காவல் நிலையத்தில் ஒருவர் ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி புகார் கொடுக்க வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் டி-4 மதுரவாயல் காவல் நிலையத்திற்கு சென்று தான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும் தான்
கடந்த 1ஆம் தேதி மதுரவாயல், கிருஷ்ணாநகர், நூம்பல் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் தனது கார் மீது மோதி தகராறு செய்ததாகவும், நடவடிக்கை எடுக்கும்படியும் புகார் கொடுத்தார்.
இது குறித்து டி-4 மதுரவாயல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் டி-4 மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்படவே, ஐ.ஏ.எஸ்.அதிகாரி எனக் கூறிய சுபாஷின் அடையாள அட்டையைக் காண்பிக்க சொல்லி, அந்த அடையாள அட்டையை பரிசோதித்து பார்த்தபோது சந்தேகம் ஏற்பட்டது.
அதன்பேரில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டதில், சுபாஷ் கொடுத்த அடையாள அட்டை போலி என்றும், சுபாஷ் ஐஏஎஸ் அதிகாரி அல்ல என்பதும் தெரியவந்தது.
அதன்பேரில், டி-4 மதுரவாயல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி வலம் வந்த சுபாஷை கைது செய்து, அவரிடமிருந்து போலி அரசு அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட சுபாஷ் விசாரணைக்குப் பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக முன்னதாக டிஜிபி சைலேந்திரபாபு ஓய்வு பெற்ற நீதிபதிகள் அரசு அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் அரசு சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தொடர்ந்து அதுபோன்று தனது கார்களின் ஓய்வுபெற்ற வருவாய் துறை, நீதித்துறை, காவல்துறை, அதிகாரிகள் தங்களது கார்களில் அரசு சிண்ணத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.
இது தவிர குறிப்பாக மனித உரிமை ஆர்வலர்கள், இன்டர்நேஷனல் மனித உரிமை, மாநில மனித உரிமை, உலக மனித உரிமை கூட்டமைப்பு என்றெல்லாம் பல டூபாக்கூர்கள் வித, விதமாக கலர், கலராக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு சுத்துகிறார்கள்.
குறிப்பாக எழுதப் படிக்கத் தெரியாத நிறையப்பேர் தன்னைப் பத்திரிகையாளர்கள் என்றும் யூடியூபர் என்றும் அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களிலுல் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்தவாரம் அம்பத்தூரில் விபச்சார அழகிகளை வைத்து உல்லாச விடுதி நடத்தும் ஒரு பெண்ணிடம் சில பத்திரிகையாளர்கள் தங்களுக்கே பணம் தர வேண்டும்
கப்பம் கட்ட வேண்டுமென்று நடந்த சண்டையில் அடிதடி நடந்து கை கலப்பாக மாறி.
ஒரு பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சத்தியம் தொலைக்காட்சியில் பணியாற்றும்
சுதாகர் என்பவர் எந்தவித காரணமும் இன்றி ஜூனியர் விகடன் செய்தியாளரை அடித்து தாக்கிய வழக்கில் அவர் மீது திருவள்ளூர் டவுன் போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது அந்த புகார் தற்போது நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட தக்கது.
இதற்கு தமிழக அரசும் தமிழக காவல்துறையின் தலைவரும் சரியான வழிகாட்டுதலை ஏற்படுத்தி முறைப்படுத்த வேண்டும்.என்று சொல்லுகிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள் நடவடிக்கை எடுப்பாரா டிஜிபி சைலேந்திரபாபு.