chennireporters.com

#Fake journalist arrested; இளம்பெண்ணை மிரட்டிய போலி பத்திரிகையாளர் கைது. இன்ஸ்பெக்டர் காலில் விழுந்து கெஞ்சிய பரிதாபம்.

இளம் பெண்ணை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த போலி பத்திரிகையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் மூலக்கடை கக்கன் ஒடையை சேர்ந்தர் சேகர்  அவரது மகள் சௌமியா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலி பத்திரிகையாளர் மணி என்கிற மணிமாறன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,

 போலி பத்திரிகையாளர் மணிமாறன்.

ஆண்டிப்பட்டி தாலுக்கா கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் சௌமியா கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் எனக்கு சொந்தமான 75 பவுன் நகைகளை கடை மடலைக்குண்டு பகுதியில் உள்ள ஜஸ்டின் கோபிநாத் என்பவருக்கு சொந்தமான கோபி என்ற அடகு கடையில் நகையை அடகு வைத்திருந்தேன். 26.10. 2003 ஆம் தேதி குறிப்பிட்ட நகைகளை திருப்புவதற்காக பத்து லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தி இருந்தேன். எனது நகை மற்றும் திருப்ப செலுத்திய தொகையை கோபிநாத் என்பவர் மோசடி செய்து விட்டார்.

இந்த நிலையில் ஜஸ்டின் கோபிநாத் என்பவரின் உறவுக்காரர் எனக் கூறிக்கொண்டு மணிமாறன் என்ற நபர் செல்போனில் என்னை அழைத்து கடந்த 21.9. 2024 அன்று காலை 7:15 மணிக்கு அதே போல அடுத்த நாளும் தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களாக என்னை செல்போனில் அழைத்து என்னை ஆபாசமாக பேசினார்.

அது தவிர எனது வாட்ஸ் அப்பில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு மெசேஜ் அனுப்பினார். மேலும் நகை அடகு வியாபாரம் தொடர்பாக என்னிடம் பேச வேண்டும் என்றும் கூறினார். நான் பேசவில்லை பின்பு நகை அடகு விவகாரத்தில் எனக்கு உதவிய ஞானசேகர் என்பவரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட மணிமாறன் ஞானசேகர் அக்கா மகன் அமர்நாத் என்பவரிடம் எனக்கு கள்ளத்தொடர்பு உள்ளதாக பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

மேலும் நீங்கள் எதற்கு சௌமியாவுக்கு போன் செய்தீர்கள் என்று கேட்டபோது ஞானசேகர் இடம் ஜஸ்டின் கோபிநாத் என்னுடைய மனைவியின் உடன் பிறந்த சகோதரர் அவர். நான் அப்படித்தான் தலையிடுவேன் என்று கூறினார். மேலும் சௌமியாவை மிரட்டினால் போலீசில் புகார் செய்வார் என ஞானசேகர் கூறியபோது நான் அவளை ச*** வைத்துக் கொள்ள கூப்பிட்டேன் என்று ஒரு புகார் செய்ய சொல் என பலமுறை அந்த வார்த்தையை கூறியுள்ளார்.

அந்த ஆடியோ ஆதாரம் ஞானசேகரன் செல்போனில் இருந்ததை பென்டிரைவில் ஏற்றி கொடுத்தார். நான் ஜஸ்டின் கோபிநாத் மீது காவல்துறையில் புகார் கொடுத்து ஆண்டிப்பட்டி டிஎஸ்பி அலுவலகத்திற்கு கடந்த 5.10. 2024 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு எனது தாயாருடன் சென்றபோது டிஎஸ்பி அலுவலகத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த மணிமாறன் என்னை பார்த்து ஆபாச வார்த்தைகளால் பெரிய பத்தினி மாதிரி நடிச்சு புகார் அடி கொடுக்கிற உன்னை கொல்லாமல் விடமாட்டேன் உன்னையும் உன் பிள்ளைகளையும் உங்கள் ஆத்தா தம்பி எல்லோரையும் வெட்டிக் கொள்ளாமல் விடமாட்டோம் டி என்று பொது இடத்தில் மிகவும் கேவலமாக பேசி என்னை மிரட்டினார்.

பெண்ணென்றும் பாராமல் எனக்கு உதவி செய்பவர்களை தவறாக இணைத்து பிரச்சனை செய்கிறார். ஆபாசமான அருவருக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தி என்னை பேசி வருகிறார். மேலும் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.  கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் எனது வீட்டிற்கு வந்து யாரோ கதவை தட்டினர். அது மணிமாறனாக இருக்குமோ என எங்களுக்கும் சந்தேகம் உள்ளது. அவர் தான் எனக்கு பலமுறை கொலை மிரட்டல் விடுத்தவர். நாங்கள் சுதந்திரமாக வெளியே நடமாட பயமாக உள்ளது.

இவரால் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே இந்த நபரிடம் இருந்து என்னையும் என் குடும்பத்தாரையும் பாதுகாக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று சௌமியா கடந்த 18ஆம் தேதி கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து போலீசார் கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். 296 /24 பிரிவு 296 பி 74 ,79, 351, 2, பிஎன்எஸ் அண்ட் ஃபோர் ஆஃப் தமிழ்நாடு பெண்கள் வதை சட்டம் அடிப்படையில் மணிமாறன் மீது புகார் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் அவரை கைது செய்து ஜேஎம் ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவ்வாறு அந்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .இது குறித்து ஆண்டிப்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் நாம் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்களை போலீசார் தெரிவித்தனர்.

 

இந்த மணிமாறன் ஒரு டுபாக்கூர் பேர்வழி இவர் எந்த பத்திரிகையிலும் பணியாற்றுவதில்லை. ஆனால் இவர் தன்னை பத்திரிகையாளர் என்று மிரட்டி அரசு அலுவலர்கள் மற்றும் தேனி ,ஆண்டிப்பட்டி, போடி ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் மிரட்டி மாதம் மாமுல் வாங்குவார். அதிகாரிகளை மிரட்டியும் மாமூல் வாங்குவார். அது தவிர முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது தம்பிக்கு தான் நெருக்கம் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார்.  இவர் பெரும்பாலும் கட்டப்பஞ்சாயத்து செய்து சொகுசாக வாழ்க்கை நடத்தி வரும் ஃபிராடு ஆசாமி என்கின்றனர் போலீசார்.

 

தேனி மாவட்டத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட போலி பத்திரிகையாளர்கள் சுற்றி வருகின்றனர். அதில் ஒருவர் கூட முறையாக பத்திரிகை சம்பந்தமாக படித்தோ அல்லது முதுகலை இளங்கலை பட்டமும் படிக்காமல் எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு படித்துவிட்டு பத்திரிகை துறை பற்றி எந்த அனுபவும் இல்லாமல் அவர்களாகவே ஒரு போலி ஐடி கார்டை வைத்துக்கொண்டு அரசு அதிகாரிகளையும் கல்குவாரிய அதிபர்களையும் மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்.

இதே போல கடந்த மாதம் அரசு மருத்துவரை மிரட்டி 25 லட்சம் ரூபாய் பணம் கேட்ட வகையில் ஒன்பதுக்கும் மேற்பட்ட போலி பத்திரிகையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  இதேபோல மணிமாறன் தன்னை பெரிய பத்திரிகையாளர் என்று தமிழ்நாடு முழுக்க பல அதிகாரிகளை மிரட்டி வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அது தவிர தான் பெரிய அரசியல் விஐபி என்று தன்னை அடிக்கடி சொல்லும் சொல்லிக் கொள்ளும் மணிமாறன் சரியாக எழுதக்கூட தெரியாத டுபாக்கூர் என்கின்றனர். தேனி மாவட்ட பத்திரிகையாளர்கள் நகைக்கடை நகை வைக்கப்பட்டது தொடர்பாக அந்தப் பெண் கொடுத்த புகாரில் போலீசார் அவர் மீது அவரை கைது செய்ய அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.

 

அப்போது குளித்துவிட்டு வருகிறேன் என்று சொன்ன மணிமாறன் பாத்ரூமில் இருந்து எகிரி குறித்து தப்பி ஓடி உள்ளார்.  அப்போது துரத்தி பிடித்த போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் உள்ள சப் இன்ஸ்பெக்டர் ஒருவரின் காலில் விழுந்த மணிமாறன் கெஞ்சி கதறி அழுதுள்ளார்.  நான் தெரியாமல் போதையில் பேசி விட்டேன்.  என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சியுள்ளார்.  இருப்பினும் போலீசார் அவரை மடக்கி பிடித்து வந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் இந்த செய்தி தேனி போடி கம்பம் ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க.!