chennireporters.com

அழகிய இளம் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபர் கைது 5 பிராடு நிருபர்கள் தலைமறைவு.

கைது செய்யப்பட்ட நிருபர் இலக்கிய ராஜா.

அம்பத்தூர் பகுதியில் செய்தியாளர்கள் என்று சொல்லி அழகிய இளம் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த செய்தி தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அம்பத்தூர் அடுத்த ஒரகடம் ராஜேந்திர பிரசாத் தெருவை சேர்ந்தவர் சங்கீதா. இவருக்கு ஏற்கனவே ஜெயபால் என்பவருடன் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக வசந்தராஜா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு கேமிரா உடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் தாங்கள் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் என்றும் நீங்கள் தவறான தொழில் செய்வதாகவும் எனவே நீங்கள் எங்களுக்கு மாதம் மாதம் பணம் தரவேண்டும் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அந்த பெண் பணம் தர மறுத்ததாகவும் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.இதில் வீட்டில் இருந்த வசந்தராஜாவுக்கும்  அந்த கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டது.

வசந்த ராஜா மற்றும் சங்கீதாவின்அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓடியது.

அதிலிருந்து ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர் பெயர் இலக்கியராஜா அம்பத்தூர் மேற்கு பானு நகரை சேர்ந்தவர் என்பதும் அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றின்  அடையாள அட்டையை வைத்திருந்தது கண்டுபிடிக்க ப்பட்டது.

அது தவிர தற்போது தொடங்கியுள்ள ஒரு புதிய தொலைக்காட்சியில் அவர் செய்தியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அந்த செய்தி நிறுவனத்தின் செய்தி ஆசிரியராக இருப்பவர் மீது ஏற்கனவே பாலியல் வழக்கு உள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பெண் பத்திரிகையாளர்கள் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பிராடு நிருபர்களான ஆவடியை சேர்ந்த அருண், மகேஷ், விக்னேஷ், அபிலாஸ், உட்பட நான்கு பேரை தேடி வருகின்றனர்.

விசாரணையில் இவர்கள் ஏற்கனவே அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல்,  போன்ற பகுதியில் உள்ள மசாஜ் சென்டரை குறிவைத்து இந்த கும்பல் பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது.

அது தவிர ஆவடி மற்றும் அம்பத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரசு மதுபானக் கடைகளிலும் அங்கு உள்ள பார் உரிமையாளர்களி டமும் மாதாமாதம் மாமுல் வாங்கிவருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் உளவுத்துறை போலீசாருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் சில பத்திரிகையாளர்கள் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

அதில் சில பத்திரிகையாளர்களுடன் போலீஸ்காரர்கள் இணைந்து கல்லா கட்டி வருவதாகவும் சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் விஷயங்களை போலீசாருக்கு இந்த போலீஸ் செய்தியாளர்களும் போலீஸ் செய்தியாளர்களுக்கு மாமுல் தராதவர்கள் பற்றி செய்தி போட சொல்லி போலீஸ்காரர்கள் வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் மேற்படி பெண் “உணர்ச்சிகளை பரிமாறிக் கொள்ளும் அன்பு நிலையம்” நடத்தி வருவதாகவும் அவர் மாதாமாதம் போலீசாருக்கு அன்பளிப்பு வழங்கிவருவதாகம் சில நேரங்களில் சில காக்கிகளுக்கு அன்பை அள்ளி தருவதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்துஆவடி மாநகர போலீஸ் கமிஷனர்நேர்மையான போலீஸ் அதிகாரிகள் குழுவை அமைத்து இதை விசாரிக்க வேண்டும் என்கின்றனர் சில நேர்மையான பத்திரிகையாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள்.

இதையும் படிங்க.!