Chennai Reporters

முத்து பட வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகர்.

20 வருடங்கள் ஆகியும் ரஜினியுடன் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.முத்து பட வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகர் ஜெயராம்.

கடந்த 20 வருடங்கள் ஆகியும் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க முடியவில்லையே என்ற சோகம் இருப்பதாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் முத்து.

இந்த படத்தில் ரஜினிகாந்த் நண்பராக நடித்திருப்பவர் சரத்பாபு முதலில் இந்தகதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது மலையாள நடிகர் ஜெயராம் தானாம்.

காட்சி ஒன்றில் ரஜினிகாந்தை கை நீட்டி அடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று நிராகரித்துள்ளார் ஜெயராம்.

முத்து படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை என்று பேட்டி ஒன்றில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் ஜெயராம்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!