chennireporters.com

பிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை.

பிரபல கன்னட நடிகை சௌஜன்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சௌஜன்யா, ஏராளமான கன்னட சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர்.இவர் இரு கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சௌஜன்யா பெங்களூருவில் உள்ள கும்பல்கோடு என்ற பகுதியில் இருக்கும் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சௌஜன்யா வின் வீட்டுக்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

பின்னர் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது நண்பர்கள் மற்றும் அவரது உறவினர்கள் இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கான முன் அவர் எழுதிய கடிதம் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது.

அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்ததற்கு தனது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலும் அவருக்கு மனரீதியான சில பிரச்சினைகள் இருந்து வந்ததாகவும் அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.சௌஜன்யாவின் இழப்பு கன்னட ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க.!