chennireporters.com

விவசாயிகள் போராட்டம் கருப்பு தினமான மே-26.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 6 மாதங்களாக டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அனைத்து விவசாயிகள் முன்னணி அமைப்பினர் தங்களின் வீரம் செறிந்த அமைதியான விவசாய போராட்டம் தொடங்கி இன்றுடன் (மே 26-)ஆம் தேதி 6 மாதங்கள் நிறை
வடைகின்றன.

இதனை குறிப்பிடும் விதத்தில் இன்றைய தினம் நாடு முழுவதும் எதிர்ப்பு தினமாக அனுசரித்து விட வேண்டும் என்று ஒட்டுமொத்த விவசாயிகள் போராட்டம் அறிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இது தவிர திருச்சி சேலம் கோவை ஈரோடு என பல மாவட்டங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்றது ,

மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தலைமையில் போராட்டம் நடை பெற்றது.

மதுரையின் பல பகுதிகளில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்பதாகைகளை ஏந்தி கருப்பு துணிகள், கருப்பு ஆடைகளையும் அணிந்து கருப்பு தினத்தை அனுசரித்தனர்.

இதையும் படிங்க.!