chennireporters.com

வாட்ஸ்அப் ட்ரெண்டிங் படித்ததில் பிடித்தது.

மனித சமூகம் இன்னும் கூட மாறவில்லை என்பதற்கு இதுபோன்ற பதிவுகள் ஒரு காரணமாக அமைந்து விடுகின்றன.

கண் தானத்தை வலியுறுத்தி அரசும் பல சமூக அமைப்புகளும் என்னதான் கருத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்தாலும் மண்ணில் புதைந்து அழுகிப் போகிற மனித உடலையும் கண்களையும் தானம் செய்ய இன்னும் மனித சமூகம் மறுக்கிறது.

என் அப்பாவின் கண்களை எனது அம்மாவின் கண்களை நான் தானம் செய்ய மாட்டேன் என்று படித்தவர்கள் மத்தியில் இன்னும் கூட மூடத்தனமான நம்பிக்கை மனதில் நிலை கொண்டிருக்கிறது.

எனவே இறந்த பின் மனித உடலையும் மனித உறுப்புகளையும் தானம் செய்ய நாம் முன் வரவேண்டும் என்பதையே இந்த பதிவு வலியுறுத்துகிறது.

இதையும் படிங்க.!