chennireporters.com

அது நான் அல்ல. நண்பர்களே.

திருச்சி எஸ்.பி. செந்தில் குமார் விளக்கம்.

எனது பெயரிலும் ஒரு போலி முகநூல் கணக்கை ஆரம்பித்து பலருக்கும் நட்பு அழைப்பு கொடுப்பதாகவும், இன்பாக்ஸில் சென்று அவசர பண உதவி தேவை என்று கேட்பதாகவும் தெரிகிறதுகண்டிப்பாக அது நானல்ல மிகவும் கவனமாக இருக்கவும்.இதுபோல் சைபர் குற்றவாளிகள் பல தளங்களிலும் பலவிதமான முறைகளில் இயங்கு கின்றனர்.நண்பர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும்.

பொதுவாகவே யாரேனும் உதவி கேட்டால், அவர்களுடைய தொலைபேசிக்கு அழைத்து, உதவி கேட்பது அவர்கள் தானா? என்று உறுதி படுத்திக் கொண்டு பிறகு முடிவு எடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இதேபோல் இன்னொரு முகநூல் நண்பர் இன்பாக்ஸில் ஒரு செய்தியைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.

T.செந்தில்குமார்,
காவல்துறை அதிகாரி,
திருச்சி

அதாவது அவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், ஏதோ ஒரு பெண், நண்பர் போல பேசியதாகவும் பிறகு பேச்சு நெருக்கமாக எல்லைமீறி சென்றதாகவும் தெரிகிறது.பிறகு வீடியோ காலில் பேச ஆரம்பிக்க அதுவும் வரம்பு மீறி ஆபாசமாக சென்று அந்தப் பெண் அதை பதிவு செய்து கொண்டு இப்பொழுது பணம் கேட்டு மிரட்டுகிறாளாம்.கடுமையான மன உளைச்சலில் புலம்பினார்.

இதெல்லாம் நாமே உண்டாக்கி கொள்கிற வம்பை தவிர வேறல்ல! அதாவது முன்பின் தெரியாதவர்களிடம் எந்த அளவு பேச வேண்டும்? எதை பேச வேண்டும் ?என்று ஒரு வரைமுறை வைத்துக் கொண்டால் இது போன்ற வம்பு வருவதற்கு வாய்ப்புகள் குறைவு.

மிகவும் கவனமாக இருக்கவும்.அதுவும் இந்த பெருந்தொற்று காலத்தில் கூட பிணம் தின்னி கழுகுகள் போல பிறருடைய இயலாமை, அறியாமை,துயரம்,மன வலியை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் கூட்டம் அதிகமாகவே செயல்படுவதாக தெரிகிறது.அதிலும் சமூக வலை தளங்களில் உள்ள நண்பர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமாக இருக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய முகநூல் கணக்கு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக என்னுடைய எண்ணிற்கு அழைக்கலாம் 9444114125 அல்லது வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவிக்கலாம்.. என்று கேட்டு கொண்டுள்ளார்.T.செந்தில்குமார்,காவல்துறை அதிகாரி,திருச்சி

இதையும் படிங்க.!