chennireporters.com

#Felix Gerald Arrest; கஞ்சா சங்கரின் நண்பர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது.

சவுக்கு சங்கர் வழக்கு விவகாரம்: ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் சேர்மனிடம் மனு கொடுக்க சென்றிருந்த ஃபெலிக்ஸ் ஜெரால்டை இரவு 11.30 மணி அளவில் தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சவுக்கு சங்கர் விவகாரம்: கைது செய்யப்பட்ட பெலிக்சை சென்னை அழைத்து வந்த போலீசார்
முன்னதாக சவுக்கு சங்கர் பேசிய வீடியோவை ஒளிப்பரப்பியது தொடர்பாக முன் ஜாமீன் கோரி ரெட் பிக்ஸ் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கடந்த மே 9ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே குமரேஷ் பாபு, சில யூடியூப் சேனல்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க சரியான நேரமிது” என்று தெரிவித்தார்.

சவுக்கு சங்கர் வழக்கு விவகாரம்: ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் டெல்லியில் கைது!
ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் பெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது அவருக்கு சில கேள்விகளை சென்னை உயர்நீதிமன்றம் முன் வைத்தது. அப்போது ரெட் பிக்ஸ் எடிட்டர் ஜெரால்டு மற்றும் சவுக்கு சங்கர் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் 1988 ஆம் ஆண்டின் தமிழ்நாடு பெண் துன்புறுத்தல் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 

YouTube journalist Felix Gerald arrested by Tamil Nadu police

சவுக்கு சங்கருடனான நேர்காணலின் போது ரெட் பிக்ஸ் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்ட்டும் பெண் காவலர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குறிப்பிட்டது உயர்நீதிமன்றம். இதையடுத்து, இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் தன்னை கைது செய்யாமல் இருக்க வேண்டும் என  பெலிக்ஸ் ஜெரால்ட் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என மனு தாக்கல்  செய்திருந்தார்.

சவுக்கு சங்கர் வீடியோவை நீங்குங்கள்.. YOUTUBE நிறுவனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸ் கடிதம் - Kumudam - News | Magazines
நீதிபதி, ஜெரால்டின் நேர்காணலின் தன்மையை விமர்சித்தபோது, ஜெரால்டு, சவுக்கு சங்கரை புண்படுத்தும் அறிக்கைகளை வெளியிட தூண்டியிருக்கலாம் அல்லது ஊக்குவித்திருக்கலாம் என்றும், ஜெரால்டின் பத்திரிகை அனுபவம் அவரது செயல்களை நியாயப்படுத்துகிறதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் ஜெரால்ட் முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டது.

“ இதைத்தான் நீங்கள் நேர்காணல் என்று அழைக்கிறீர்களா? மனுதாரர் பெலிக்ஸிடம் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், சவுக்கு சங்கர் அப்படி பேசும்போது, நீங்கள் அதை தடுக்காமல், ஊக்குவித்தீர்களா..? என்று கேள்வி எழுப்பியது.

கூடுதல் அரசு வக்கீல் கோரிக்கையின்படி, ஜெரால்டின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு நீதிபதி ஒத்திவைத்த நிலையில்,   டெல்லியில் தமிழ்நாடு காவல்துறையினர் ஜெரால்டை கைது செய்தனர்.

திருச்சி: பெண் காவலர்களையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாகப் பேசி ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு சவுக்கு சங்கர் பேட்டி அளித்திருந்தார். இது தொடர்பாகச் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தற்போது அவர் கோவை சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்.இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வந்த நிலையில், சவுக்கு சங்கர் பேசிய பேட்டியை ஒளிபரப்பு செய்த யூடியூப் சேனல் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

சவுக்கு சங்கர் விவகாரம்; பெலிக்ஸ் ஜெரால்டை ரயில் மூலம் சென்னை அழைத்து வந்த திருச்சி போலீசார்! - Youtuber Felix Gerald

அதன்படி, கடந்த10 ஆம்‌ தேதி இரவு டெல்லியில், திருச்சி காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் பெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்தனர்.இந்த நிலையில், டெல்லியிலிருந்து ரயில் மூலமாக பெலிக்ஸ் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

பின்னர், சென்னையிலிருந்து போலீஸ் வாகனம் மூலமாகத் திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனை தொடர்ந்து, திருச்சி 3வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது பாரதி உட்பட 3 வழக்கறிஞர்கள் தங்களையும் மனுதாரராக இணைக்க வேண்டும் என கூறி வாதங்களை முன்வைத்தனர்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்டு அறிந்த பின் நீதிபதி, ஜெயப்பிரதா, சவுக்கு சங்கர் கொடுத்த நேர்காணலில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளைக் காண வேண்டும் என்றார். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மே 27 ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி, காவல்துறையினர் பெலிக்ஸை கைது செய்து திருச்சி மத்தியச் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

எதையாவது வச்சுட்டு போய்டீங்கனா.. போலீசை வீட்டிற்குள் விட மறுத்த பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி.. கடும் வாக்குவாதம் - Kumudam - News | Magazines

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து பெலிக்ஸ் ஜெரால்டின் வழக்கறிஞர் விக்னேஷ்வரன் கூறியதாவது, “டெல்லியில் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டை திருச்சி நீதிமன்றத்தில் மாலை 5.30 மணியளவில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களைக் கேட்டு அறிந்த நீதிபதி, சவுக்கு சங்கர் வழங்கிய நேர்காணலைப் பார்த்துவிட்டு பின்னர் அவருக்கு 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டார். பல்வேறு குற்றச்சாட்டின் கீழ் வழக்குகள் அவர் மேல் பதியப்பட்டாலும், ஒரு வழக்கு மட்டுமே அவருக்குப் பிணை வழங்க முடியாத வகையில் உள்ளது.

மற்றவை பிணை வழங்கும் வகையில் உள்ளது.காவல்துறை தனக்கு எந்தவித தொந்தரவும் தரவில்லை என தெரிவித்தார். 167 பிரிவின் படி கைது செய்யப்பட்ட பகுதியில் உள்ள நீதிமன்றம் அவர்கள் ஆஜர்ப்படுத்தப்பட வேண்டும் என உள்ளது. ஆனால், அவர் அரசியல் பின்புலம் இருப்பதால் அவரை கொண்டு செல்லும்போது கூட்டம் திரளும் என காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், சவுக்கு சங்கர் பேசியதால் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாகப் பெண் காவலர்கள் தங்களது ஆதங்கத்தை நீதிபதியிடம் தெரிவித்தனர்” என்று கூறினார்.

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்படார் பெலிக்ஸ் ஜெரால்டு.. | Etamilnews

திருச்சியில் இருந்து நீதிமன்றத்திற்கு டெம்போ வேனில் அழைத்துவரப்பட்ட ஃபிலிப்ஸ்யை சுற்றி பெண் காவலர்கள் சூழ்ந்திருந்தனர்.  ஒரு சிலர் அவரை நீதிமன்றத்திற்கு உள்ளே செல்லுமாறு சொன்னபோது அவர் அவமானத்தால் தலை குனிந்து சரிங்க மேடம் என்று சொன்னாராம்.  அவர்  பெண் காவலர்களை பார்க்க அசிங்கப்பட்டு அவமானத்தால் தலை குனிந்து நடந்து சென்றார்.

பின்னர் பெண் போலீசார் மத்தியில் அவர்களுடனே வேனில் அமர்ந்து சிறைக்கு சென்றார். பெண் பெண் காவலர்களை பற்றி அவதூறாக பேசிய சவுக்கு சங்கருக்கு ஆதரவாக செயல்பட்ட ஃபிலிக்சுக்கு  தமிழக காவல்துறை வழங்கிய மிகப் பெரிய பாடம்தான் இந்த பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் சூழப்பட்டிருந்தது என்று சொல்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தொடர் மதுப்பழக்கம் உள்ள ஃபிலிம்ஸ் ஜெரால்டுக்கு கஞ்சா சங்கர் பலமுறை கஞ்சா நிரப்பிய சிகரெட்டுகளை கொடுத்ததாக அவரது நண்பர்கள் தரப்பு சொல்லி வருகின்றனர். இந்த நிலையில் கஞ்சா சங்கர் ஃபிலிக்ஸ் ஜெரால்டுக்கு கஞ்சா கொடுத்திருப்பதாகவும் அவரது வீடு மட்டும் அலுவலகத்தில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்று கோவை சைபர் கிரைம் காவல்துறைக்கு சென்னையில் இருந்து பல புகார் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது .

அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள பிலிக்ஸ் வீட்டிற்கு இன்று மே14 ம்தேதி  போலீஸ் அதிகாரிகள் சென்று சோதனை நடத்த சென்ளனர்.  ஆனால் அவரது மனைவி தாங்கள் எங்கள் வீட்டிற்குள் கஞ்சா வைத்து விடுவீர்கள் உங்களை நாங்கள் சோதனை சோதனை செய்து தான்  உள்ளே அனுப்ப முடியும் என்று பேசியிருக்கிறார்.  ஃபிலிக்சின் மனைவிக்கும் அவரது வீட்டை சோதனை செய்ய சென்ற காவலர்களுக்கும் பெரும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது அந்த காட்சி  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க.!