chennireporters.com

பெண் தூய்மை பணியாளர் பலி உறவினர்கள் போராட்டம்.

வெண்னிலா

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சோழம்பேடு பகுதியில் துப்புரவு பணி செய்யும் பொழுது (குப்பை வண்டி ) டிராக்டரில் இருந்து தவறி விழுந்து வாகனத்தின் பின் சக்கரம் ஏறி உடல் நசுங்கி பெண் துப்புரவு ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருவள்ளூர் அடுத்த ஏகாட்டுரை சேர்ந்தவர் வெண்னிலா வயது (48) துப்புரவு தொழிலாளி இவர் ஆவடி மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று முன்தினம் தூய்மைப் பணிகளை முடித்துக்கொண்டு சோழம்பேட்டை கழிவுகளை கொட்ட செல்லும் போது தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுமதிக்கப்பட்டது உடற்கூறு ஆய்வில் முடிந்த பிறகு உடலை வெண்ணிலாவின் மகளிடம் ஒப்படைக்க மருத்துவ நிர்வாகம் அறிவுறுத்தியது.

ஆனால் இறந்து போன வெண்ணிலாவின் உறவினர்கள் பெரியப்பா மற்றும் சித்தப்பா இருதரப்பினருக்கும் மேற்கண்ட கிரீன் வாரியார் இழப்பீடு வாங்குவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால் இன்னும் உடலை வாங்காமல் ஆம்புலன்ஸ் இலேயே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

ஆவடி மாநகராட்சி கமிஷனர் சரஸ்வதி.

ஆவடி மாநகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக அரசு வழங்கும் இழப்பீட்டு தொகையை வெண்ணிலாவின் மூத்த மகளிடம் முடிவுசெய்துள்ளது மற்ற இழப்பீட்டு தொகை அனைத்தும்.

அவர்கள் இருதரப்பு இரண்டு மகள்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் தற்போது இறந்த வெண்ணிலாவின் உடல் ஆம்புலன்ஸ் இலேயே வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது இந்த நிலையில்

உடன் பணிபுரியும் பெண்கள் அந்த பெண்ணின் வீட்டில் வரும் தை மாதம் இரண்டாவது மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாங்கள் கடந்த ஆறுமாதமாக எங்களுக்கு உரிய பாதுகாப்பு கவசம் வேண்டும் என ஆவடி மாநகராட்சி கமிஷனர் சரஸ்வதி மற்றும் அமைச்சர் நாசரிடம் கேட்டு பல முறை முறையிட்டோம்.

ஆனால் எந்த பலனும் இல்லை .இப்ப ஒரு உயிரே போயுடுச்சு சார் என்றார் கண்ணீர் மல்க. நாங்க ஏழைங்க சார் அதற்காக எங்க உயிருக்கு உத்திரவாதம் இல்லை.

சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும் எங்களுக்கு அதிகாரிகள் யாரும் இல்லை.

தூய்மை பணியாளராக இருக்கும் எங்களுக்கு எந்த பாதுகாப்பு வசதிகளை ஒப்பந்த ஊழியர்களுக்கு கீரின் வாரியார்ஸ் நிறுவனம் எந்த பாதுகாப்பு வசதிகளையும் செய்து தரவில்லை.

அது அரசு தூய்மை பணியாளர் அவசர கால விடுமுறை கேட்டால் கூட கமிஷனர் சரஸ்வதி லீவு கொடுக்க மறுக்கிறார் என்கிறார்கள் ஊழியர்கள்.

இனிமேலாவது தூய்மைப் பணியாளர்களின் உயிர் மீது அக்கறை கொண்டு அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு கவசங்களை வழங்கி அவர்களை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என்கிறார்கள் ஆவடி தூய்மைப் பணியாளர்கள்.

இனிமேலாவது மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வாரா கமிஷனர் சரஸ்வதி?

இதையும் படிங்க.!