chennireporters.com

பெண் போராளி மலாலா கோரிக்கை.

இந்தியத் தலைவர்கள் இஸ்லாமியப் பெண்களை கொடுக்க கூடாது என்று நோபல் பரிசு பெற்றவரும் பெண்ணுரிமை போராளியுமான மலாலா கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் இந்திய தலைவர்கள் இஸ்லாமியப் பெண்களை கொடுக்க கூடாது.

ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்லும் பெண்களை அனுமதிக்க மறுப்பது கொடுமையானது. படிப்பிற்கும் ஹிஜாப் இருக்கும் இடையே ஒன்றை தேர்வு செய்யும்படி நம்மை கல்லூரிகள் கட்டாயப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள உடுப்பி, சிக்மங்களூர், மாண்டியா மாவட்டங்களில் இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என காவி துண்டு அணிந்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாண்டியாவில் உள்ள பி.இ.எஸ் (PES) கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்கான் என்ற மாணவியை காவி துண்டு அணிந்து வந்த கூட்டம் ஜெய் ஸ்ரீராம் என முழக்கம் இட அதற்கு பதிலாக அல்லாஹு அக்பர் என அந்தப் பெண்ணும் முழக்கமிட்டார்.

ஷிமோகா நகரில் கல்லூரி ஒன்றில் தேசியக்கொடி இருக்கும் இடத்தில் காவி கொடியை சில மாணவர்கள் ஏற்றினார்.இதனால் சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதையும் படிங்க.!