chennireporters.com

மகுடம் சூட்டப்பட்ட ஆசியம்மா மார் தட்டி நின்ற பெண்ணியம்.

தமிழ்நாட்டில் நேற்று 30 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் இதில் தமிழ்நாடு காவல்துறையில் உளவுத்துறை ஐ.ஜி.யாக ஆசியம்மாள் ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆசியம்மாள் நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர் அதேபோல் தனது துறையில் மிகவும் கண்டிப்புடன் இருக்க கூடியவர்.

தூத்துக்குடியில் கொங்கராயக் குறிச்சி என்ற கிராமத்தில் போதிய வசதிகள் இன்றி வறுமையில் படித்து வளர்ந்தவர்.

குடும்பத்தில் நிறைய கஷ்டங்கள் இருந்தும், அதற்கு இடையிலும் கல்வி ஒன்றையே குறிக்கோளாக வைத்துக்கொண்டு தொடர்ந்து பல்வேறு பட்டங்களை பெற்றவர்.

எம்.எஸ்.சி, எம்.டெக் மற்றும் எம்.பி.ஏ ஆகிய பட்டங்களை பெற்றவர் வேறு பணிகளில் கவனம் செலுத்தாமல் குரூப்-1 தேர்வுகளை எழுதுவதில் கவனம் செலுத்தி வெற்றி கணியைப்பறித்தவர்.

இதில் தேர்ச்சி பெற்று டி.எஸ்.பியாக பணியமர்த்தப்பட்டார்.பல்வேறு பிரிவுகளில் எஸ்.பி.யாக இருந்தவர்.பின்னர் 4 வருடங்களுக்கு முன் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று உளவுத்துறையில் பணியமர்த்தப்பட்டார்.

இந்த நிலையில் தமிழ்நாடு காவல்துறையில் உளவுத்துறை ஐ.ஜி.யாக ஆசியம்மாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழ்நாடு காவல்துறையில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் உளவுத்துறை ஐ.ஜி.யாக பெண் அதிகாரிகள் யாரும் நியமிக்கப்பட்டது இல்லை முதல் முறையாக இந்த பதவி பெண் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பிட தக்கது. இது ஆசியம்மாவின் நேர்மைக்கும் உண்மைக்கும் கிடைத்த பரிசு என்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள் நாமும் வாழ்த்துவோம்.

இதையும் படிங்க.!