சென்னை ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை கிழக்கு கடற்கரை சாலை, மகாபலிபுரம் சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அது தவிர மெரினா கடற்கரை சாலை தடுப்புகள் அமைத்து மூடப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ள தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மின் மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
அது தவிர சென்னையில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளும் மூன்று மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பல இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. தற்காலிகமாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த விமானம் திருச்சியில் தரை இறங்கி உள்ளது.செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையத்தில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று மதியம் புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.வங்கக்கடலில் புயல் உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்தது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த பெஞ்சல் என்ற பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
சென்னை நகரில் உள்ள 6 சுரங்கப்பாதைகளும் மூடல். மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே நிலை கொண்டு இருந்தது. முன்பு இது புயலாக மாறாது என வானிலை மையம் நேற்று கூறியிருந்தது. ஆனால், இன்று காலை, அடுத்த சில மணி நேரங்களில் புயலாக மாறும் என வானிலை மையம் அறிவித்தது.
இந்நிலையில், இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பிற்பகல் 2:30 மணிக்கு புயலாக வலுவடைந்தது என அறிவித்துள்ளது. இது, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (நவ.30) பிற்பகல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். அப்போது மணிக்கு 60 முதல் 70 கி.மீ., வரையிலும், அதிகபட்சமாக 90 கி.மீ.,வரையிலும் காற்று வீசக்கூடும். கடல் சீற்றமாக காணப்படும் எனவும் கூறியுள்ளது. இந்த புயல் தற்போது புதுச்சேரிக்கு தென் கிழக்கே 270 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 13 கி.மீ., வேகத்தில் நகர்கிறது. உருவாகிறது பெஞ்சல் புயல்; மீண்டும் வானிலை மையம் அறிவிப்பு