chennireporters.com

பட்டியலினத்தவரின் சாதி பெயர் சொல்லி திட்டி அடித்து விட்டு ஐம்பது ஆயிரம் நட்ட ஈடு தரும் உயர் சமூகத்தினர் திருவள்ளூர் அருகே வினோதம்…….

திருவள்ளூர் அருகே ஈக்காடு கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் யோவான்.
தலித் சமூகத்தை சார்ந்தவர் அதே கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசலு மகன் கோவிந்தராஜ் உயர் சாதி (நாயுடு) சமூகத்தை சேர்ந்தவர்.

யோவான்

கோவிந்தராஜிக்கு சொந்தமான வயல் வேலைக்கு வரமறுத்தவரை சாதியின் பெயரை சொல்லி அசிங்கமாக பேசி, திட்டி செருப்பால் அடித்து காயப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கோவிந்தராஜ் மீது புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட தலித் சமூகத்தை சார்ந்த யோவான் 26/04/2022 ம் தேதி அன்று புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இன்ஸ்பெக்டர் நடராஜன் பொறுப்பு பெயரளவிற்கு மட்டும் விசாரணை நடத்தினார்.எஸ்.சி, எஸ்.டி, வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவின் படி சாதி தொடர்பான புகாரை டி.எஸ்.பி ரேங்கில் உள்ளவர்கள் தான் விசாரிக்க வேண்டும்.

இன்ஸ்பெக்டர் விசாரிக்க சட்டத்தில் இடமில்லை இதுவே தவறு என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவி.

இந்த வழக்கு தொடர்பாக கோவிந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று
திருவள்ளூர் தி.மு.க எம்.எல்.ஏ. வி.ஜி ராஜேந்திரன்

தலித் சமூகத்தை சார்ந்த பூந்தமல்லி தனித்தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கிருஷ்ணசாமியின் பி.ஏ. சின்னா ஆகியோர் போலீசாருக்கு செல்போன் மூலம் பேசி உயர் சமூகத்தை சேர்ந்தவர் மீது வழக்கு போடக் கூடாது என்று அன்பாக பேசி லேசாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தலித் சமூகத்தைச் சார்ந்த யோவான் குடும்பத்தினரை உயர் சமூகத்தினர் புகாரை வாபஸ் வாங்க உறவினர்கள் மூலம் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அது தவிர யோவான் அவரது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருபவர்.தனது இரண்டாவது மகன் வீட்டில் இருந்து வருகிறார்.யோவான் மனைவியை சமாதானப்படுத்திய உயர் சமூகத்தினர் அவரிடம் முப்பது ஆயிரம் நட்ட ஈடு கொடுத்ததாக கூறப்படுகிறது.

சாதி பெயர் சொல்லி செருப்பால் அடித்த சம்பவத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் பலமாக உள்ள தலித் சமூகத்தை சார்ந்த எந்த கட்சிக்கும் அதாவது புரட்சி பாரதம், வி.சி.க, பி.எஸ்.பி போன்ற எந்த கட்சியினரும் உயர் சாதி சமூகத்தினருக்கு எதிராக கேள்வியும் கேட்கவில்லை. போராடவும் இல்லை.

திமுகவை சேர்ந்த சில நிர்வாகிகள் ஈக்காடு கிராமத்தை சேர்ந்த உயர் சமுகத்தை சார்ந்த அதாவது நாயுடு சமூகத்தைச் சார்ந்த கோடீஸ்வரர்கள் வழக்கறிஞர்களையும் தலித் சமூகத்தை சார்ந்தவர்களை அவமானப்படுத்தும் விதமாக பேசி வருகின்றனர்.

டாக்டர் வருண் குமார். ஐ.பிஸ்

உயர் சமூகத்தினரை எதிர்த்து போராட யாருக்கும் தைரியம் இல்லை ஆளும் கட்சியாக இருப்பதால் நாங்கள் எங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இதை யாரும் சட்டரீதியாக கையாள முன்வர வில்லை.அந்த அளவுக்கு திருவள்ளூரில் சமூக அக்கறையுடன் வழக்கு நடத்த யாரும் விரும்புவதில்லை என்கின்றனர்.

இதுகுறித்து தமிழக முதல்வர் தனி விசாரணை கமிட்டி வைத்து மேற்படி ஈக்காடு கண்டிகை கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மீது உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட தலித் சமூகத்தை சார்ந்த அவருக்கு நீதி வழங்க வேண்டும் என்கின்றனர் அந்த கிராம பொதுமக்கள்.

இது தொடர்பாக நாம் இன்ஸ்பெக்டர் நடராஜனிடம் கேட்டதற்கு நான் புகார் குறித்து மட்டும் விசாரணை நடத்தினேன். மற்ற புலன் விசாரணையை டி.எஸ்.பி. சந்திரதாசன் விசாரிப்பார் என்று முடித்து கொண்டார்.

டி.எஸ்.பி. சந்திர தாசன்.

நாம் டி.எஸ்.பி. யிடம் பேச முயற்சி செய்தோம். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை

இது தொடர்பான செய்தியை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எந்த அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் யாரும் (கவர்) செய்யவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!