chennireporters.com

ஒரு மாதமாக வடியாத வெள்ளம். தத்தளிக்கும் பொது மக்கள். நடவடிக்கை எடுக்குமா விடியல் அரசு?

குட்டையை குழப்பி மீன் பிடிக்கிறார்கள் என்ற பழ மொழியைத்தான் கேட்டிருப்பீர்கள்.ஆனால் ஏரியில் மீன் வளர்த்து பாக்கெட்டை நிரப்பி வருகிறார்கள் அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

என்ன நடந்தது என்று பார்க்க அந்த பகுதிக்கு சென்றோம்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ளது திருநின்றவூர் கிராமம்.இந்த பகுதியில் சுதேசி நகர், முத்தமிழ் நகர், பெரியார் நகர், கன்னிகாபுரம் என பல நகர் பகுதிகள் இருக்கிறது.

முத்தமிழ் நகர் பகுதியில் மட்டும் 2500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த பகுதியில் வசித்து வருகிறார்கள்.இந்த பகுதியில் 850 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஈஷா ஏரி உள்ளது.

ஏற்கனவே இந்த பகுதியில் குடிசை மாற்று வாரியம் அமைந்துள்ளது.கடந்த மாதம் பெய்த மழையில் ஏரி நிரம்பி நகர்ப் பகுதிக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.பல வருடங்களாக இந்த பிரச்சனை நீடித்து வருகிறது.

தற்போது வெள்ள நீரை வெளியேற்ற அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் பலன் இல்லை.இந்த பகுதியில் உள்ள அமைச்சரை சந்தித்து மனு கொடுத்தும் பலனில்லை.

அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஏரியில் மீன் வளர்த்து அதில் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர்.அது தவிர உயர் சமூகத்தினர் தங்களுடைய விவசாயத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும் என்று தண்ணீரை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் நகர்ப் பகுதிக்குள் தண்ணீர் உள்ளே சூழ்ந்துள்ளது.அந்த பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் அன்புச்செழியன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

அன்பு செழியன்.

கடந்த ஒரு மாதமாக பெய்த மழையில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.ஒவ்வொரு வீட்டிலும் 6 அடி உயரம் வரை தண்ணீர் சூழ்ந்துள்ளது.வீடுகளில் பொது மக்கள் வாழ முடியாமல் வீடுகளை காலி செய்து உறவினர் வீடுகளுக்கும் வேறு இடங்களில் குடிபெயர்ந்து வருகின்றனர்.

ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான நாசரை சந்தித்து பொதுமக்கள் மனு கொடுத்தும் தண்ணீரை வெளியேற்ற இதுவரை எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

அந்த பகுதி பொதுமக்கள் இந்த நிலையில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காமல் 40 லட்சம் ரூபாய் வெள்ளநீர் பாதிப்புகளுக்கு வேலை செய்ததாக திருநின்றவூர் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் போலியாக ஒரு அறிக்கையை சமர்ப்பித்து தயாரித்து அதற்கான செலவுத் தொகையாக 40 லட்சம் ரூபாய் பில் போட்டிருக்கிறார்கள்.

இது குறித்து அன்புச்செழியன் புகாரும் அனுப்பியிருக்கிறார்.நீண்டகாலமாக அந்தப்பகுதியில் மழைக்காலங்களில் இந்த பிரச்சனை நீடித்து வருகிறது.இந்த பிரச்சினையை சரி செய்ய எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.

தற்போது 10,000 பொது மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.இது தொடர்பாக பொது மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் பகுதிக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் வந்து பார்வையிட்டு எந்த ஒரு நடவடிக்கை எடுக்கச் சொல்லி எந்த உத்தரவும் வழங்கவில்லை.வடியாத வெள்ளத்தில் தத்தளிக்கும் பொதுமக்கள் வாழ்க்கையை விடியல் அரசு நடவடிக்கை எடுக்குமா.?

இதையும் படிங்க.!