கோவையில் ஊரடங்கில் தவிப்போருக்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தினர் அன்னதானம்.

May 22, 2021

By ஆர்.கே. பூபதி

food

பொதுமக்கள் பாராட்டு.

கொரோனா ஊரடங்கின் காரணமாக உணவின்றி தவிப்போரின் நலனை கருத்தில் கொண்டு பல்சமய நல்லுறவு இயக்கத்தினர் கோவை சாய்பாபா காலனி.

வடகோவை,
பூமார்க்கெட் ஆகிய பகுதியில் இருநூறுக்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினார்கள்.

இது போன்றேதினமும் இருநூறு மேற்பட்டோருக்கு வழங்கி வருகின்றனர்.இத்திட்டத்தை தினமும் வழங்க முடிவெடுத்து வழங்கி வருவதால்ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர் என்பது பாராட்டுக்குரியது.

இந்த நிகழ்ச்சியில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ராமசாமி, தலைவர் ஹாஜி முஹம்மது ரஃபி,மாவட்ட செயலாளரும் நமது தேடல் கோவை வடக்கு செய்தியாளருமான ஆர்.ஆர்.பூபேஷ்,செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

பயனாளிகள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமுக இடைவெளியை கடைப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்ச்சியில் நமது தேடல் கோவை மண்டல பொறுப்பாளர் ஜே.ராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Share:

ஆர்.கே. பூபதி

May 23, 2021

Leave a Comment