பிரபல தமிழ் நடிகையை சீரழித்த முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்.

May 29, 2021

By இரா. தேவேந்திரன்.

நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்.

சென்னை தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததுடன் கல்யாணம் செய்து கொள்வதாக கூறி ஐந்து வருடம் தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு என்னை ஏமாற்றி விட்டதாக முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை கமிஷனர் ஆபீஸில் சினிமா நடிகை சாந்தினி என்பவர் புகார் அளித்துள்ளார்.

நாடோடிகள் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்து இருப்பவர் சாந்தினி மலேசியாவை சேர்ந்தவர் இவர் திடீரென்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

அந்த புகாரில் சாந்தினி கூறியிருப்பதாவது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் என்னை பாலியல் வன்புணர்வு செய்து விட்டு பின்னர் கல்யாணம் செய்து கொள்வதாக சொல்லி ஐந்து வருடம் என்னுடன் ரகசியமாக குடும்பம் நடத்தினார்.

சில முறை கர்ப்பம் அடைந்தேன். கருவையும் கலைத்தேன். இனி மேல் தனியாக வாழ முடியாது என்பதால்என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று நான் அவரிடம் கேட்டேன் அதற்கு அவர் உன்னுடைய அந்தரங்க போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுகிறார்.

நடிகை சாந்தினி

மேலும் கூலிப்படையை ஏவி உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.இதை பற்றி கேட்டதற்கு என்னை அடித்து கொடுமைப் படுத்துகிறார்.அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த புகார் கடிதத்தில் கூறியிருக்கிறார்.

இந்தப் புகார் அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் சினிமா வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது ஜெயலலிதா ஆட்சியில் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் தான் மணிகண்டன்.

ராமநாதபுரத்தை சேர்ந்தவர்.எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகளுடன் மோதல் ஏற்பட்டு வந்தது.தொடர்ந்து மாவட்டத்தில் பல புகார்கள் தலைமைக்கு சென்றபடி இருந்தது இதனிடையே எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர்.

இதனால் அவர்கள் பதவி பறிக்கப்பட்டது இந்த விவகாரத்தில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர் தான் மனிகண்டன்.அதன்பிறகு அவரை அரசியலில் ஓரம் கட்டினார்கள்.நடந்து முடிந்த தேர்தலில் போட்டியிடவாய்ப்புதரப்படவில்லை.இந்நிலையில் அவர் மீது பாலியல் புகார் கிளம்பி உள்ளது.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஏற்கனவே ஊழல் பாலியல் தொடர்பாக சம்பந்தப்பட்ட புகார்கள் விசாரிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார்.இந்த புகார் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Share:

இரா. தேவேந்திரன்.

May 29, 2021

Leave a Comment