நடிகர் விக்ரம் நடித்த சாமி திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி ஆறுச்சாமிக்கு பயந்து பெருமாள் பிச்சை தப்பி தலைமறைவாக ஓடுவதைப்போல அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மஞ்ச சட்டை கே.டி. ராஜேந்திர பாலாஜி கைதுக்கு பயந்து தலைமறைவாகி ஓடிக்கொண்டே இருக்கிறார்.
ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் மூன்று கோடிக்கு மேல் பணம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி என். பாபு ராய் , வி.எஸ். பலராமன், எஸ்.கே முத்துப்பாண்டியன்.ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.உள்ளிட்டவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அவர்கள் மீது மோசடி வழக்கு பதிவுசெய்யப்பட்டது.இந்த நிலையில் கே.டி. ராஜேந்திர பாலாஜி சார்பில் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதி
மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோருக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்தது.
கே.டி.ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய தமிழக போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.ராஜேந்திர பாலாஜியின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ராஜேந்திர பாலாஜியை பிடிக்க பெங்களூருக்கு தனிப்படை சென்றிருக்கிறது மேலும் கூடுதலாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.கேரளா, கோவை, கொடைக்கானல் ஆகிய பகுதிகளுக்கும் தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.