chennireporters.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு.

ஜெ.ஜெயலலிதா பிப்ரவரி 24, 1948ல் கர்நாடகா, மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம்-வேதவல்லி இணையரின் மகளாக பிறந்தார்.இவரது இயற்பெயர் கோமளவல்லி.

இவர் தாத்தா அந்த ஊரில் இருந்த கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தார். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயது இருக்கும் பொழுதே அவர் தந்தை ஜெயராம் காலமானார்.

அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த ஜெயலலிதாவின் அம்மா வேதவல்லி என்ற தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார்.அவர் பெங்களூரில் இருந்தபோது ஜெயலலிதா பிஷப் கார்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.

சென்னைக்கு வந்த பின்னர், 1958-ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரசன்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் தேறினார்.ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே படிப்பைக் கைவிட்டு நடிகையானார்.

ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.ஜெயலலிதாவுக்கு ஜெயக்குமார் என்ற அண்ணன் ஒருவர் இருக்கிறார்.அவருக்கு தீபக் என்ற மகனும், தீபா என்ற மகளும் உள்ளனர்.

ஆரம்ப காலத்தில் தாய் சந்தியா இருந்த போது ஜெயக்குமார் குடும்பத்துடன் எல்லோரும் ஒன்றாகவே போயஸ் கார்டனில் இருந்தார்கள்.தாய் காலமான பின்னர் ஜெயக்குமார் குடும்பத்துடன் வெளியேறி விட்டார்.

அதன்பின் ஜெயலலிதாவுக்கும் அவர்கள் குடும்பத்துக்குமிடையில் தொடர்பு விட்டுப்போனது.ஜெயலலிதா 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.எம்.ஜி.ஆருடன் இணைந்து 28 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் சிவாஜி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ஏ.வி.எம். ராஜன், என். டி. ராமராவ், நாகேஸ்வர ராவ், தர்மேந்திரா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

மக்கள் பலரும் ஜெயலலிதாவின் நடிப்பை வெகுவாக ரசித்தார்கள்.இவரது நடிப்பை பாராட்டி இவருக்கு ‘கலைச்செல்வி’ என்ற பட்டத்தை அளித்தார்கள்.

இவர் ம.கோ. இராமச்சந்திரன் உடன் நடித்த அனைத்து திரைப்படங்களும் வெகுவாக பாராட்டப்பட்டது.தன் நடிப்பின் மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார்.

ஜூன் 4, 1982ல் கடலூரில் நடைபெற்ற விழாவில் அ.தி.மு.க. வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார்.அதன் பிறகு மார்ச் 24, 1984ல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.

நாடாளுமன்றத்தில் தன் ஆங்கில புலமையால் பல தலைவர்களை கவர்ந்தார்.தனது கன்னிப்பேச்சிலேயே அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியைக் கவர்ந்தார்.

இவருக்கு நாடாளுமன்றத்தில் 185வது இருக்கை அளிக்கப்பட்டது.அந்த இருக்கை 1962 முதல் 1967 வரை தி.மு.க.வின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அமர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு முன்னர், அதிமுகவைச் சேர்ந்த மோகனரங்கம் (மேலவை உறுப்பினர்) அவ்விருக்கையில் அமர்ந்திருந்தார்.எம்.ஜி.இராமச்சந்திரனின் மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்தது.

கட்சியின் மூத்த தலைவர்கள் எம்.ஜி.இராமசந்திரன் மனைவி ஜானகி இராமச்சந்திரன் தலைமையில் ஓர் அணியாகவும் பிறர் ஜெயலலிதாவின் தலைமையில் மற்றோர் அணியாகவும் பிரிந்தனர்.

ஜனவரி 28, 1988ல் தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் நடை பெற்ற வாக்கெடுப்பின்பொழுது மோதல் வெடித்தது.1989ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களைக் கைப்பற்றியது.

ஜானகி தலைமையிலான அதிமுக அணி ஒரே இடத்தில் மட்டுமே வென்றது.இதனால் ஜானகி அரசியல் களத்திலிருந்து விலகினார்.ஜெயலலிதா அ.தி.மு.க வின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.

1989ம் ஆண்டில் நடை பெற்ற சட்டமன்றத் தேர்தலில் போடி நாயக்கனூர் தொகுதியிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரானார்.

அவர் மீதும் அவருக்குத் துணையாக இருந்த ம.நடராசன் மீதும் தொடரப்பட்ட வழக்கு ஒன்றிற்காக நடராசன் வீட்டில் மேற் கொள்ளப்பட்ட சோதனையில் ஜெயலலிதாவின் சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதம் கிடைத்தது.

அந்நிகழ்விற்குப் பின்னர், 1989மார்ச் 25, ம் நாள் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த போது முதல்வர் கருணாநிதி தாக்கப்பட்டார்.அந்த நேரத்தில் ஜெயலலிதாவும் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்தச் சட்டமன்றத்தில் பெண்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை.சட்டமன்றம் எப்பொழுது பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாறுகிறதோ அப்பொழுது தான் சட்டமன்றத்துக்குள் வருவேன்” என்று கூறிச்சென்றார்.

1991ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக – காங்கிரஸ் கூட்டணி 225 தொகுதிகளில் வெற்றி பெற்றது.ஜெயலலிதா ஜூலை 24, 1991ல் முதல் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

சட்டசபை இவரைப் புகழ்ந்துரைக்கும் இடமாக மாறியது.ஜெயலலிதா தனது முதலமைச்சர் பணிக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு ரூபாய் மட்டும் ஊதியமாகப் பெற்றார்.

இவர் மீதும் அமைச்சர்கள் மீதும் எதிர்கட்சிகள் பல ஊழல் புகார்களை கூறினார்கள்.இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் பல திட்டங்களை தமிழகத்தில் கொண்ட வந்தார்.

பெண்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டு பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தார்.ஜெ.ஜெயலலிதா, தன் தோழி சசிகலாவுக்கு அக்கா மகனான சுதாகரனை தன் மகனாகத் தத்தெடுத்தார்.

அவருக்கு 1995 செப்டம்பரில் ஆடம்பரமாகத் திருமணம் செய்துவைத்தார்.1991 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 168 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது.

1998 ம் ஆண்டு நடை பெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்று அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசில் அதிமுக அங்கம் வகித்தது.

2001 ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 132 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது.

2011 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 150 இடங்களில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் தலைமையில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, 37ல் வென்று வெற்றி பெற்றது.

மேலும் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் பெற்றது.

2016 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 227இல் நேரடியாகவும், ஏழு தொகுதிகள் கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட்டு 134 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது.

1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது 2016ல் தான்.2016 ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 4 உறுப்பினர்களை அனுப்பியதன் மூலம், நாடாளுமன்றத்தில் அதிமுகவின் பலம் 50 (37 மக்களவை + 13 மாநிலங்களவை) ஆக உயர்ந்தது.

இது தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்யாத சாதனை.தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார்.இவர் 1991 முதல் 1996 வரையும், 2001 ம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார்.

2015ம் ஆண்டு மே 23 ம் தேதி முதல் இறக்கும் வரையில் முதலமைச்சராக இருந்தவர்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த இவரை “புரட்சித் தலைவி” எனவும் “அம்மா” எனவும் இவரது ஆதரவாளர்கள் அழைத்தனர்.

தனது தொட்டில் குழந்தை திட்டத்துக்காக ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா சபை) மத்தியில் கைதட்டைப் பெற்ற இந்தியாவை சார்ந்த முதல் பெண் முதலமைச்சர் ஆவார்.

ஜெயலலிதா டிசம்பர் 5,ம் தேதி 2016ல் தனது 68வது வயதில் மறைந்தார்.

இதையும் படிங்க.!