#Special story, #new story, #DMK party story, #former minister Murthy story, #Murthy house and queries raid story
திமுகவின் முன்னாள் அமைச்சர் மூர்த்தி, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்தார். அவருக்குச் சொந்தமாக மதுரையின் புறநகர் பகுதிகளில் மணல் குவாரிகள் மற்றும் கல் குவாரிகள் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. அதன்படி, மதுரை பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் உள்ள கிரஷர் மற்றும் செம்மண், கல் குவாரிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் விதிகளை மீறி அதிக அளவில் செம்மண் மற்றும் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது.


காவல்துறையினர் விசாரணை;
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு தொடர்பான விசாரணைக்காக மதுரை ஐயர் பங்களா, ரோஜா வீதியில் உள்ள மூர்த்தியின் வீட்டில் மாவட்ட காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கல் குவாரி டெண்டர் தொடர்பான ஆவணங்களைப் பெற்று காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், குவாரிகளில் விதிகளுக்கு உட்பட்டுதான் மண் மற்றும் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதா, எவ்வளவு அளவு வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விசாரணையின் முழு விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சோதனை நடைபெறும் நிலையில், மூர்த்தியின் வீட்டைச் சுற்றிலும் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் அமைச்சர் மூர்த்தி திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார். அப்போது கோடிக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இவர் அமைச்சராக இருந்த போது தான் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் பெரும்பாலான இடங்கள் லே-அவுட்டுகளாக போடப்பட்டது.
ஜி ஸ்கொயர் அடித்த கொள்ளை;
ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் பத்திரப்பதிவுகள் நிலம் தொடர்பான விஷயங்கள் அனைத்திலும் தமிழ்நாடு முழுவதும் இருந்த பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் சார்பதிவாளர்கள் எந்தவித லஞ்சமும் இல்லாமல் உடனுக்குடன் வினாடிக்கு வினாடி அந்த வேலைகளை செய்து முடித்தனர். இதில் முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மருமகன் மாப்பிள்ளை சார் என்று திமுகவினர் அன்போடு அழைக்கும் சபரீசன் பல கோடிகளை கொள்ளையடித்தார்.

துரைமுருகன் செய்த பல கோடி ரூபாய் ஊழல்;
நீர்வளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய வகையில் துரைமுருகன் உள்ளிட்ட 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் மூர்த்திக்கு சொந்தமான கல்குவாரிகள், மண் குவாரி, மணல் குவாரிகளில் அரசுக்கு வருவாய் ஏற்படுத்தும் வகையில் பல கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது என அரசுக்கு புகார் அளிக்கப்பட்டதும் உடனடியாக மதுரை மாவட்ட போலீசார் இன்று காலை திடீரென அவர் வீட்டில் அலுவலகங்களில் மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்தினர். அதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்;
தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள முக்கிய அதிகாரிகள் சிலர் கடந்த திமுக ஆட்சியில் ஒவ்வொரு அமைச்சரின் சொத்து மதிப்பும் சுமார் ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் கோடி வரை இருக்கும் என்கிறார்கள். எனவே திமுக அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் கொள்ளை அடித்த சொத்துக்கள் பற்றி தமிழக வெற்றிக்கழக அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால் ஒட்டுமொத்த திமுக அமைச்சர்களும் புழலுக்கு போவது உறுதி என்கிறார்கள் சில உளவுத்துறை அதிகாரிகள்.
எனவே முதலமைச்சர் ஜோசப் விஜய் நடந்து முடிந்த அமைச்சரவையில் கூட்டத்தில் சில ஐஏஎஸ் அதிகாரிகளை வெளுத்து வாங்கியதாக கோட்டை வட்டாரம் தெரிவிக்கிறது. அமைச்சர்களை உட்கார வைத்து ஐஏஎஸ் அதிகாரிகளை நிற்க வைத்து ஜெயலலிதா பாணியில் அதிரடி காட்டினாராம் முதலமைச்சர் ஜோசப் விஜய். இதனால் அன்பில் மகேஷுக்கு பிறகு துரைமுருகனும் முன்னாள் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தியும் விரைவில் ஜெயிலுக்குப் போவார்கள் என்கிறார்கள் கோட்டை வட்டார அதிகாரிகள்.


மூர்த்தி மீது போடப்பட்ட வழக்கின் பின்னணி;
முன்னாள் அமைச்சர் மூர்த்தி மீது போடப்பட்ட வழக்கின் பின்னணி மதுரை வட்டாரப் பகுதிகளில் அதாவது வாடிப்பட்டி சத்திர வெள்ளாளப்பட்டி பாலமேடு அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கல் மற்றும் செம்மண் வெட்டி எடுத்ததாக புகார் இருந்தது எதனால் அரசுக்கு சுமார் 5 கோடியே 39 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை;
மதுரை ரோஜா வீதியில் உள்ள மூர்த்தி இல்லத்தில் சோதனை நடத்திய போலீசார் கல்குவாரி டெண்டர் மட்டும் நிதி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த சோதனை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் போதைப் பொருள் கடத்தல் விவகாரங்களில் இருந்து கவனத்தை திசை திருப்பவே இந்த சோதனை நடத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மூர்த்தி தரப்பில் இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.