chennireporters.com

சென்னை தி.மு.க.வில் சேரப்போகும் மாஜி பெண் அமைச்சர்.

கடந்த ஒரு வருடமாகவே முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலுக்கு அ.தி.மு.க.வில் பிரச்சினை இருந்து வருகிறது.கே.சி.வீரமணி .

இவரை தொடர்ந்து அவமானப்படுத்திவருவதாகவும் தேவையில்லாமல் தன்னை பற்றி விமர்சித்து கட்சிக்குள் கெட்ட பெயரை ஏற்படுத்தி வருவதாகவும் பலமுறை செய்தியாளர்களும் கண்ணீர்விட்டு சொல்லியிருந்தார்.

கே.சி.வீரமணி

அமைச்சர் நிலோபர் கபில்.மோசடி புகார் காரணமாக கட்சியிலிருந்து நிலோபர் கபில் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.அ.தி.மு.க தலைமை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதற்குத்தான் நிலோபர் கபில் கொந்தளித்துள்ளார்.என்னை நீக்கியதற்கு பணமோசடி புகார் தான் காரணம் என்றால் அ.தி.மு.க ஆட்சியில்அமைச்சர்களாக இருந்த பல பேர் மீது மோசடிப் புகார்கள் இருக்கிறது.ஏன் எடப்பாடி பழனிசாமி மீது கூட தான் ஊழல் புகாரை தளபதி ஸ்டாலின் கூறியிருக்கிறார் என்று சொன்னார்.

முதலமைச்சர் என்று சொல்லாமல் தளபதி என்று சொன்னதற்கு நிருபர்கள் உடனேயே நீங்கள் தி.மு.க.வில் சேரப்போகிறார்களா என்று கேட்டதற்கு ஆமாம் என்றும் சொல்லவில்லை இல்லை என்றும் மறுக்கவில்லை.விரைவில் தெரியப்படுத்துவேன்.

என்று ஒரு சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.இந்த சஸ்பென்ஸ் தான் தமிழக அரசியலில் தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நிலோஃபர் கபிலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!