திருமணம் செய்து கொள்வதாக கூறி, நடிகையை ஏமாற்றிய வழக்கில் கைதான, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமின் மனுவை சென்னை செசன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்தது.
சென்னை பெசண்ட் நகரைச் சேர்ந்த நடிகை ஒருவர் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது போலீஸ் கமிசனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.
அதில் திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை காதலித்தார் இதை நம்பி நானும் அவரை காதலித்தேன் இதனால் தான் கர்ப்பம் அடைந்தேன்.
இதை அவர் கலைத்து விட்டார். பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார் தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி வந்தார்.
ஆவகே, தன்னை ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து மாஜி அமைச்சர் மணிகண்டன் தலைமறைவானார் பெங்களூரில் பதுங்கியிருந்த மணிகண்டனை கைது செய்த தனிப்படை போலீசார் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சிறையில் இருக்கும் மணிகண்டன் சார்பில் ஜாமின் கேட்டு சென்னை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது இந்த மனுவை, முதன்மை செசன்ஸ் கோர்ட் நீதிபதி செல்வகுமார் விசாரித்தார்.
புலன் விசாரணை நிலுவையில் உள்ளது கைதான மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது.
ஆகவே அவரது ஜாமின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது இதையேற்று மணிகண்டனின் ஜாமின் மனுவை நீதிபதி செல்வகுமார் தள்ளுபடி செய்தார்.
இதற்கிடையில், இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள மணிகண்டனின் உதவியாளர் பரணிதரனுக்கு ஐகோர்ட் முன்ஜாமின் வழங்கியதுபுகாரில் மணிகண்டனிடம் அறிமுகப்படுத்தினார் என்றுதான் உள்ளது.
அவருக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் எப்.ஐ.ஆரில் இல்லை ஆகவே பரணிதரனுக்கு முன் ஜாமின் கொடுப்பதாக நீதிபதி தண்டபாணி தெரிவித்துள்ளார்.