chennireporters.com

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜனவரி 20ம் தேதி வரை நீதிமன்ற காவல்.

தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ .3 கோடிக்கு மேல் மோசடி செய்த புகாரில் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.

அவர் கடந்த இருபது நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தார்.இவரை நேற்று தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் காரில் போகும் போது கைது செய்தனர்.

பின்னர் விருது நகர் அழைத்து வந்து மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து ராஜேந்திர பாலாஜியிடம் டி.ஐ.ஜி தலைமையிலான போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினார்கள்.பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதி பரம்வீர் ஜனவரி 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.இந்நிலையில்ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதே போலராஜேந்திர பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையும் மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதையும் படிங்க.!